பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்


"அடக்கமாயிருப்பது தப்பு என்றால் அவர் அப்படியிருந்ததும் தப்புத்தான்’

“ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை...”

“என்ன நம்பிக்கை ?”

“இப்போ நடக்கிற கலைஞர் ஆட்சியும் எல்லாருக்கும்! பொதுவான ஆட்சியாத்தானே இருக்கு ? நாமக்கல்லா கவனிக்கும் அவர் சாரங்கபாணி அண்ணனையும் கவனிப்பாருங்கிற நம்பிக்கைதான் அது.”

“கலைஞர் ஆட்சியிலே சாரங்கபாணி கெளரவிக்கபட்டா, அது கலைஞர் ஆட்சிக்கே ஒரு பெருமையாயிருககாதா?..ம்..அப்புறம் ?”

“மாயவரத்திலேயிருந்து தஞ்சாவூருக்குப் போனோம். அங்கே தான் அய்யர் கம்பெனி கொஞ்சம் கலகலக்க ஆரம்பிச்சது...”

“ஏன் ?”

“நவாப் ராஜமாணிக்கமும் அண்ணன் சாரங்கபாணியும் அய்யர் கம்பெனியிலேயிருந்து விலகித் தனிக் கம்பெனி ஆரம்பிச்சாங்க. அந்தக் கம்பெனிக்கு நானும் எம்.ஆர்.எஸ். மணியும் அய்யர்கிட்டே சொல்லிக்காமப் போயிட்டோம். புதுக் கம்பெனிக்குப் பாட ஆள் வேண்டாமா ? அதுக்காக சி.எஸ். ஜெயராமனைக் கூப்பிட்டோம். அவருக்கு வர இஷ்டந்தான்; ஆனா அய்யர் அவரை விடறதாயில்லே. ஜெயில்லே அடைச்சி வைக்கிற மாதிரி அவரைக் கம்பெனியிலேயே அடைச்சி வைச்சிருந்தாரு அங்கிருந்து ஜெயராமனை எப்படிக் கிளப்பறதுன்னு நான் யோசிச்சேன், யோசிச்சேன், அப்படி யோசிச்சேன். கடைசியிலே அஞ்சாம்படை ஆசாமி ஒருத்தனைப் பிடிக்சேன். அவன்கிட்டே சொல்லி ஒருநாள் ராத்திரி எல்லாரும் தூங்கினப்புறம் சி.எஸ்.ஸை ‘ஜூலியட்’ மாதிரி மாடிக்கு வரச்