பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

43


காலத்து நாடக மேடையிலே ராஜாவுங்க வரப்போ வேட்டுச் சத்தம் கிளம்பும்...”

“ஏன், இந்தக் காலத்து நிஜ ராஜாக்கள், நிஜ ராஜப் பிரதிநிதிகள், நிஜ ஜனாதிபதிகள், நிஜப் பிரதம மந்திரிகள், நிஜ கவர்னர்களெல்லாம் நாடக மேடைக்கு வராமல் இருக்கும்போதே வேட்டுச் சத்தம் இன்னாருக்கு இவ்வளவு என்று கணக்குப்படி கிளம்பிக் கொண்டிருக்கிறதே, அதை நீங்கள் கவனிக்கவில்லையா ?”

“எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்... சரியான தலைவன் இல்லேன்னா, நாடே நாடக மேடையாத்தான் போவும். ஆள வரவனெல்லாம் கூத்தாடி ராஜாவாத்தான் இருப்பான்...அப்புறம் அவன் தனக்கு வோட்டுப் போட்டுட்டுத் தூங்கற ஜனங்களை எழுப்ப வேட்டுச் சத்தத்தையாவது கிளப்பிக்கிட்டிருக்க வேண்டியது தானே ?”

“கரெக்ட்...அப்புறம் ?”

“வேட்டுச் சத்தம்னா சும்மாவா, அதுக்கு வெடிகள் வேண்டாமா ? அந்த வெடிகள் கிடைக்காத ஊரிலே அதை நாங்களே தயார் சேஞ்சுக்குவோம். அதுக்கு வேண்டிய மருந்தும் எங்கக்கிட்டே எப்போதும் ஸ்டாக்"கிலே இருக்கும்...ஆனா கருமருந்து வைச்சுச் செய்யற வெடி வேறே...கருமருந்து வைச்சிச் செய்யற வெடி வெறும் சத்தத்தோடு சரி; மனோசிலை வைச்சிச் செய்யற வெடியோ மலையைக்கூடப் பொளந்துடும். அந்த மாதிரி வெடிகுண்டு ஒண்ணைத் தயார் சேஞ்சி, அதை வைக்கிற இடத்திலே வைச்சித் திருப்பதி தேவஸ்தானத்தையே தூள் துள்ளாக்கிடணுங்கற ஆத்திரம் எனக்கு...”

“ஆமாம், உங்களுக்கு வெடிகுண்டு வேறே செய்யத் தெரியுமா ?”

“நான்தான் சொன்னேனே, பகத் சிங் கோஷ்டி என்று ?...வெள்ளைக்காரக் கலெக்டர் பயலுங்களுக்கு வைக்கிறதுக்காக அதை நான் கத்துக்கிட்டிருந்தேன்.