பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. எடுத்தேன்; சுட்டேன்!

“சின்னப்பா எம்.ஜி.ஆர் எல்லாம் இருந்த ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யோடு நான் தொடர்பு கொண்டது சென்னையிலேதான்....”

“சொல்லுங்கள் சொல்லுங்கள், அதைப் பற்றி அப்புறம் சொல்வதாகச் சொல்லியிருந்தீர்களே ?

சொல்றேன் மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபாவை நான் விட்டாலும் அது இன்னும் என்னை விட்டிபாடில்லையே!”

“அதைத்தான் அய்யர் கலைத்துவிட்டதாகச் சொன்னீர்களே ?”

அய்யர் விட்டாலும் அவர் மகன் ராமசுப்பய்யர் அதை விடறதாயில்லே ‘நான் தொடர்ந்து நடத்திறேன்’ னார். அப்பா அதற்குச் சம்மதிக்கல்லே, ‘தான் தமாஷா வரிக் கணக்குக் கேட்கிற முனிசிபாலிடிக்காரனுக்கு அடிமையாயிருக்க விரும்பலேன்னா, என்மகன் அடிமையாயிருக்கிறதை மட்டும் விரும்புவேனா? அது முடியாது, நடக்காது’ ன்னு சொல்லிட்டார்...”

“பிடிவாதக்கார மனுஷராயிருந்திருப்பார் போலிருக்கிறதே ?”

“நீங்க எந்தப் பெரிய மனுஷரை வேணும்னாலும் பாருங்க, அவங்க பிடிவாதக்காரராய்த்தான் இருப்பாங்க... காந்தியார் மாதிரி வேறே ஒரு பிடிவாதக்காரர் இருக்க