பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

விந்தன்


முடியுமா? ஆச்சாரியார் மாதிரி வேறே ஒரு பிடிவாதக்காரர் இருக்க முடியுமா ? ஏன், பெரியார் மாதிரிதான் வேறே பிடிவாதக்காரர் இருக்க முடியுமா ?”

“கரெக்ட் ...அப்புறம் ?”

“நாகலிங்கச் செட்டியார்னு ஒருத்தர்...”

“அவர் வேறே நாடகக் கம்பெனிக்காரரா?”

“இல்லே; அவர்தான் ஜகந்நாதய்யர் கம்பெனியை விலைக்கு வாங்கி, அந்தக் கம்பெனிக்கு அவர் மகன் ராமசுப்பய்யரை மானேஜரா வைச்சிக்கிட்டவர்...”

“அய்யர் இதற்கு ஒன்றும் சொல்லவில்லையா?”

“அவர் சொல்றதைச் சொல்லத்தான் சொன்னார்; மகன் கேட்கல்லே. அப்பன் பேச்சைக் கேட்காத பிள்ளைங்க அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் மட்டும் இல்லே, ராமாயண காலத்திலேயே இருந்திருக்கும்போல இருக்கே இல்லேன்னா, ராமன்னு ஒருத்தனும், அவனை வைத்து ஒரு கதையும் இங்கே பொறந்திருக்குமா?”

“ராமனை விடுங்கள்; முருகனையே ‘தறுதலை தகப்பன் சாமி என்றல்லவா சொல்கிறார்கள் ?”

“சும்மா சொல்லக் கூடாது; ராமசுப்பய்யர் அந்த அளவுக்கு மோசமில்லே. அவர் கம்பெனி பொறுப்பை ஏத்துக்கிட்டதும் சிதறிப் போன நடிகர்களையெல்லாம் ஒண்ணு சேர்க்க ஆரம்பிச்சார். அவங்களிலே ரெண்டு பேரு சென்னைக்கு வந்து, என்னையும் மதுரைக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க... பழையபடி நாங்க ‘பதி பக்தி’ நாடகம் போட்டோம். அப்பத்தான் புது நாடகம் எழுதிக் கொடுக்கக் கந்தசாமி வாத்தியார் வந்து சேர்ந்தார்.”

“எந்தக் கந்தசாமி வாத்தியார் ?”

“அவர்தான் எம்.கே.ராதாவின் அப்பா...”

“ஜெமினி சந்திரலேகா, அபூர்வ சகோதரர்களிலே நடித்தாரே, அவரா?"