பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்


"ஒரே கூச்சல், கலாட்டா, ‘என்ன, ஆக்ஸிடெண்ட்டா ? ன்னு கேட்டுக்கிட்டே ஆடியன்ஸிலே கூடச் சில பேரு மேடைக்கு வந்துட்டாங்க. எனக்கு ஒண்னும் புரியல்லே, ‘ஆமாம்’னு சொல்வி வைச்சேன்...நல்ல வேளையா அன்னிக்கு ராத்திரி எனக்கு வேண்டிய ரத்தின சிங் நாடகம் பார்க்க வந்திருந்தார்...”

“அது யார் அந்த ரத்தின சிங்?”

“அவர்தான் டி.வி.எஸ். காரர்களுக்கு முந்தி மதுரையிலே பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்திக்கிட்டிருந்தவர்; நான் மோட்டார் மெக்கானிசம் கத்துக்கிட்டதுகூட அவர்கிட்டேதான்...”

“அவர் வந்து என்ன செய்தார் ?”

“போடிநாயக்கனூரான் விலாவிலே பாய்ஞ்சிருந்த குண்டுகளையெல்லாம் பக்குவமா வெளியே எடுத்தார். அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்காம வீட்டிலேயே வைச்சி, வேண்டிய சிகிச்சையும் சேஞ்சார்...”

“போலீசார் இதில் தலையிடவில்லையா ? வெற்று வேட்டுத் துப்பாக்கிக்குள்ளே குண்டு எப்படி வந்தது என்று கேட்கவில்லையா ?”

“நாமா போய்ப் புகார் செய்யாத வரையிலே அவங்களாத்தான் எந்த வம்புக்கும் வரமாட்டாங்களே . ‘ஏன் ?’ ன்னு கேட்கிறீங்களா ?...சொல்றேன்... நீதி எப்பவும் தூங்கிட்டிருக்கு: நாம் போய் எழுப்பினாத்தான் அது கொட்டாவி விட்டுக்கிட்டே எழுந்து வந்து, ‘என்ன ?ன்னு கேட்குது...இது தெரியாம சில பேரு நீதி தூங்காது, நீதி தூங்காது'ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க!”

“அது துங்கும்போது அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்; அப்புறம்?”

“கம்பெனியிலே எனக்கு இருந்த எதிரிங்க அதிகமாயிட்டாங்க, “ராதா இருந்தா நாங்க நடிக்க