சிறைச்சாலைச் சிந்தனைகள்
59
வேணும்னா வறியா ?ன்னார்...அவ்வளவுதான்; கதையிலே கேட்ட ராவணனை நேருக்கு நேராப் பார்க்க தான் அப்பவே தயாராயிட்டேன் ...பத்துத்தலைகள், கோரைப் பற்கள், இருபது கைகள் ... இதை நினைக்க நினைக்க என் ஆசை அளவு கடந்து போயிடிச்சி..."இப்பவே போவோமா, இப்பவே போவோமா ?ன்னு அவரை நச்சரிக்க ஆரம்பிச்சுட்டேன்...’ இரு, போவோம்; இரு, போவோம்’னு அவர் மத்தியானம் வரையிலே காலத்தைக் கடத்திட்டு, அதுக்கு மேலே என்னை ராவணன் வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போனார்...அங்கே போனா, பத்துத் தலைகளும் இல்லே, கோரைப் பற்களும் இல்லே... இருபதுகைகளையும் காணோம்’..தாடியும் மீசையுமா யாரோ ஒரு சாமியார் நாலைந்து இளம் விதவைகளோடு உட்காந்து ஏதோ பேசிக்கிட்டிருந்தார்.... எனக்குச் ‘சப்'பென்று போய்விட்டது; ‘பூ, இந்தச் சாமியாரா ராவணன் ?ன்னு உதட்டைப் பிதுக்கினேன். ‘ஒரு வேளை மாரீசனை முன்னாலே அனுப்பி வைச்சிட்டு, சீதையைத் தூக்கிக்கிட்டு வரதுக்காக இவர் சாமியார் வேஷத்திலே இருக்காரோ ?ன்னு குழம்பினேன். என் குழப்பம் பொன்னையாவுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும் போல இருக்கு. அவர் என்னை ஒரு தினுசாப் பார்த்துக்கிட்டிருந்தார்..."