பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

67


கோமாளிங்க'ன்னு சொல்லி, எங்களை ஆதித் திராவிடரை ஒதுக்கி வைக்கிறாப்போல ஒதுக்கி வைப்பாங்க. ஊருக்குள்ளே ஏதாவது ஒரு பாழடைஞ்ச வீடு இருந்து, அந்த வீட்டுக்கும் யாராவது ஒரு பெரிய மனுஷர் சிபாரிசு சேஞ்சா, அது எங்களுக்குக் கிடைக்கும். அந்த வீட்டையும் எதுக்காகக் கொடுப்பாங்கன்னா, அதுக்குள்ளே இருக்கிறதா அவங்க நம்பிக்கிட்டிருக்கிற பேயும் பிசாசும் எங்களை அடிச்சித் திங்கிறதா, இல்லையான்னு ‘டெஸ்ட்” பண்ணிப் பார்த்துக்கிறதுக்காகக் கொடுப்பாங்க!”

“அப்படி யாரையும் அடித்துத் தின்னவில்லையென்று தெரிந்தால் உடனே வீட்டைக் காலி செய்து விடச் சொல்வார்களா?”

“அவங்க காலி செய்ய சொல்றதுக்கு முந்திதான் நாங்களே காலி சேஞ்சிடுவோமே!”

“ஏன் ?”

“ஊரூராய்ப் போய்க்கிட்டிருக்கிறதுதானே எங்க வேலை?. எல்லா ஊரும் ஒரே மாதிரியாயிருந்தா யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையே கம்பெனியை நடத்திவிடலாம்... அப்படி இருக்காது... சில ஊருக்குப் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கிட்டா போதும்; சில ஊருக்கு ரவுடியாய் மாறினாத்தான் முடியும். மொத்தத்திலே ‘அஷ்டாவதானியாயிருக்கிறவன் தான் அந்தக் காலத்திலே நாடகக் கம்பெனி நடத்த முடியும்...”

“அந்த ‘அஷ்டாவதானி'யாக நீங்கள் இருந்தீர்கள் போலிருக்கிறது...”

“ஆமாம். ஆக்டிங், மெக்கானிக், எலெக்ட்ரிக்... இதோடு நான் நிற்கல்லே; சிலம்ப வித்தைங்க எத்தனை உண்டோ, அத்தனையும் கத்து வைச்சிருந்தேன். பாக்ஸிங், ரஸ்லிங்,.... என்ன, நான் சொல்லச் சொல்ல நீங்க பின்னாலேயே நகர்ந்துக்கிட்டிருக்கீங்க?”

“எதிர்த்தாற்போல் நான் அல்லவா உட்கார்ந்திருக்கேன்?... ‘இதுதான் பாக்ஸிங், இது தான் ரஸ்லிங் என்று