பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

71


“வேறே என்ன செய்யறது? இரு. இரு’ என் அப்பாகிட்டே சொல்லி உன்னை என்ன செய்யறேன்னு பார்’னு கையாலாகாத சின்ன பயலுங்க கறுவதாப்போல கறுவிக்கிட்டே போனார்!”

“பொன்னுசாமிப் பிள்ளை ஒண்னும் சொல்ல வில்லையா ?”

“சொல்லாம இருப்பாரா? என்ன ராதா, இப்படிச் சேஞ்சிட்டியே?'ன்னார். ‘சும்மா இருங்க, துணிந்தவனுக்குத் துக்கமில்லே, துணியாதவனுக்கு எப்பவும் துக்கம்தான்'னேன். ‘பொழுது விடிஞ்சதும் அவன் சப் இன்ஸ்பெக்டரோடு வந்து உன்னையும் என்னையும் அரெஸ்ட் செய்து இழுத்துக்கிட்டுப் போயிடுவானேன்னார். “அவங்க வர்றத்துக்கு முந்தி நாம் ராணிப்பேட்டைக்குப் போய் வரதராஜுலு செட்டியாரிடம் விஷயத்தைச் சொல்வோம்; அவர் எப்படியாவது தம்மைக் காப்பாத்தி விடுவார்'ன்னேன். அவர் ‘சரின்னார். அப்படியே கிளம்பிட்டோம்.”

“செட்டியார் என்ன சொன்னார் ?”

“ஒண்ணும் சொல்லல்லே... பெத்தவங்களிலேயே ரெண்டு ரகம் உண்டு. சிலருக்குச் சோணிப்பயல்களைப் பிடிக்கும்; சிலருக்குப் போக்கிரிப் பயல்களைப் பிடிக்கும். ரெண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் செட்டியார். அவர் விஷயத்தைக் கேட்டதும், ‘அவனை இவனை அடிக்க ஆரம்பிச்சிக் கடைசியிலே போலீஸ்காரனையே அடிக்க ஆரம்பிச்சிட்டியா ? பொறு தம்பி, பொறு! உன் துடுக்குத் தனத்தை அடக்கற விதத்திலே அடக்கி வைக்கிறேன்'னு சொல்லிக்கிட்டே போய், சப் இன்ஸ்பெக்டர் செளந்தர ராஜனைப் பார்த்தார். எனக்கும் அவரைத் தெரியும். எப்போ பார்த்தாலும் ரெண்டு பக்கெட் நிறையப் பழைய செருப்புகளைப் போட்டுத் தண்ணி ஊத்தி அவர் ஊற வைச்சிக்கிட்டிருப்பார்....”

“எதற்கு ?"