78
விந்தன்
“டி.ஆர். மகாலிங்கம், ரகோத்தமன்...”
“யார் அந்த ரகோத்தமன் ?”
“அவர் தான் ஏ.வி.எம். ‘வாழ்க்கை'யிலே நடிச்ச டி.ஆர். ராமச்சந்திரன்!”
“அந்த எட்டி கேன்ட்டரா?... சரி, பிறகு ?”
“எல்லாருமாச் சேர்ந்து கோலார் தங்க வயலிலே நாடகம் நடத்திக்கிட்டிருந்தோம். அங்கே தான் ராஜசேகரன்’ படத்துக்காக என்னை ‘புக்’ சேஞ்சாங்க.”
“அதுதான் உங்கள் முதல் படமா ?”
“ஆமாம்; அப்போ ஸ்டண்ட்'டுக்கு என்னை விட்டா வேறே ஆள் கிடையாது.”
“ஹீரோ யார் ?”
“ஈ.ஆர். சகாதேவன்.”
“ஹீரோயின் ?”
“அந்த நாளிலே ஹீரோயின் அவ்வளவு முக்கியமில்லே; தேவையானப்போ ரெட் லைட் ஏரியாவுக்குப் போய் யாராவது ஒருத்தியைப் பிடிச்சிக்கிட்டு வந்துடுவாங்க.”
“டைரக்டர் ?”
“ஆர். பிரகாஷ்னு ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை. ஹாலிவுட்டுக்குப் போய் சினிமான்னா என்னன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டு வந்திருந்த ஆளு. அதாலே அவருக்கு ஏக மரியாதை காட்டுவாங்க. சதா தண்ணி வேறே போட்டுக்கிட்டே இருப்பார்.”
“ஸ்டுடியோ ?”
“பூந்தமல்லி ஹைரோடிலே இருந்தது. ‘நாராயணன் ஸ்டுடியோ'ன்னு பேரு. நாராயணன்னு சொன்னதும் பட்சிராஜா பிலிம்ஸ் ஸ்ரீ ராமுலு நாயுடு பிரண்ட் நாராயணனாயிருக்கும்னு நினைச்சுடாதீங்க. இந்த