பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. ‘ஐ வாண்ட் அநதர் ஒன்!’

“தூணிலே தலையைச் சாய்ச்சி நில்லுங்கன்னு சகாதேவின்கிட்டே சொன்ன பாவம், ‘நான் டைரக்டரா, நீ டைரக்டரா?ன்னு பிரகாஷ் என்னைக் கேட்டா, நான் என்ன சொல்வேன்?...’ அய்யா, நீங்கதான் டைரக்டருங்கிறதிலே எனக்குக் கொஞ்சங்கூடச் சந்தேகமே கிடையாது; உங்களுக்கு அதிலே ஏன் சந்தேகம் வந்தது?”ன்னு திருப்பிக் கேட்டேன். “அப்படியா சமாசாரம் ? நான் உன்னைக் கவனிச்சுக்கிற விதத்திலே கவனிச்சுக்கிறேன்’னு அவர் கருவினார். எனக்குத்தான் இதெல்லாம் தண்ணிபட்ட பாடாச்சே, சரி, கவனிச்சுக்குங்கன்னு சொல்லி, அதோடே அதை நான் விட்டுட்டேன்.”

“அவர்.. ?”

“விடுவாரா?... அந்த நாளிலே டைரக்டருங்க கையிலே தானே எல்லாம் இருந்தது... ?”

“இந்தக் காலத்து ஹீரோக்கள் சிலருடைய கையில் எல்லாம் இருப்பது போலவா ?"