பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

81


“ஆமாம், இந்தக் காலத்து ஹீரோக்கள் வெறும் ஹீரோக்களா மட்டும் இல்லையே? படாதிபதிகளாவும் “பைனான்ஷியர் களாகவும் கூட இருக்காங்களே! அதனாலே இலுங்க வைச்சது சட்டமாயிருக்கு அந்தக் காலத்து ஹரோக்களுக்கு அந்த வசதியெல்லாம் ஏது ? புரொட்யூசருக்கே கிடையாதே!”

“அப்போது ஒரு படத்தை எடுத்து முடிக்க என்ன செலவாகும்?”

“ஏறக்குறைய முப்பதாயிரம் ரூபாய் செலவாகும். அதையே முழுக்கப் போட்டு முடிக்க முடியாம அடுத்த படத்துக்கு ‘அட்வான்ஸ்’ வாங்கிப் போட்டுத்தான் முடிப்பாங்க!”

“ஹீரோ, வில்லனுக்கெல்லாம் என்ன சம்பளம் கிடைக்கும்?”

“ஓகோன்னு ஓடின ‘அம்பிகாபதியிலே நடிச்ச பாகவதருக்கே எழுநூற்றைம்பது ரூபாய் தான் கொடுத்தாங்கன்னா, எங்களுக்கெல்லாம் என்ன கொடுத்திருப்பாங்கன்னு நீங்களே தீர்மானம் பண்ணிக்குங்க.”

“அப்படியென்றால் டைரக்டருக்குத்தான் அப்போது எல்லாரைக் காட்டிலும் சம்பளம் அதிகமாக இருந்திருக்கும்....”

“சம்பளம் மட்டும் இல்லே, அதிகாரமும் அவருக்குத்தான் அதிகம்!”

“கடைசியில் அவர் உங்களை என்னதான் செய்தார்!”

“ரேஸ் கோர்ஸிலிருந்து ‘ராமா'ன்னு ஒரு முரட்டுக் குதிரையை வரவழைச்சார். அந்தக் குதிரைமேலே என்னை ஏத்தி, ஜிம்கானா மைதானத்தைச் சுத்திச் சுத்தி வரச் சொல்லி, ‘ரிஹர்சல்’ பார்த்தார்...”

“எனக்கு ஒரு சந்தேகம்..."