பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

93


“உங்கள் பாடு ரொம்ப தர்ம சங்கடமாகப் போயிருக்குமே?”

“இப்படிச் சொல்லி ரொம்ப நாளா ரொம்பப் பேர் ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கானுங்க....”

“எப்படிச் சொல்லி... ?”

“தர்மத்தையும் சங்கடத்தையும் சேர்த்துச் சொல்லி ... இது வேறே, அது வேறே இல்லையா ?.... ரெண்டையும் ஒண்ணாப் போட்டு ஏன் குழப்பனும் ?. நின்னா தர்மத்தின் பக்கம் நில்லு: இல்லேன்னா சங்கடத்தின் பக்கம் நில்லு ... நான் தர்மத்தின் பக்கம் இல்லே நிற்க வந்திருக்கேன்?... அதாலே, ‘ஐயா, காண்ட்ராக்டர் ஐயா! நானும் இந்த நாடகக் கம்பெனியிலே சேர்ந்து நடிக்கிறதிலே எனக்கு ஒண்னும் ஆட்சேபணையில்லே. ஆனா ஒண்ணு'ன்னு ஆரம்பிச்சேன்: ‘என்ன ?ன்னார். இந்த ஊரிலேயே இந்த நாடகக் கம்பெனி ரொம்ப நாளா இருந்துடிச்சி, வேறே ஊருக்கு மாத்திடுவோம், அங்கே நானும் சேர்ந்து நடிக்கிறேன்'னேன். ‘நல்ல யோசனை'ன்னார். நாலு ஸ்டேஷன் தள்ளியிருந்த ஒரு ஊர் பேரைச் சொல்லி....”

“அது எந்த ஊர் ?”

“பேர் மறந்து போச்சு; அந்த ஊருக்குப் போய் நாடகம் போடுவோம்னேன். சரி'ன்னார். அப்ப்டிச் சொல்லுங்க'ன்னு எல்லாச் சாமானையும் பாக் பண்ணி ‘செல்ப்’ போட்டுச் சேலத்துக்கு அனுப்பி வைச்சேன். காண்ட்ராக்டருக்கு மட்டும் நாலு ஸ்டேஷன் தள்ளி ஒரு டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கெல்லாம் திருச்சிக்கு டிக்கெட் எடுத்துக்கிட்டேன். நாலு ஸ்டேஷன் தள்ளி ரயில் நின்றதும் காண்ட்ராக்டர் அவசர அவசரமாக ரயிலை விட்டு இறங்கி, ‘இறங்குங்க, இறங்குங்க'ன்னு எங்களையும் இறங்கச் சொல்லி அவசரப்படுத்தினார். ‘திருச்சியிலே ஒரு விசேஷம், நாங்க அதுக்குப் போயிட்டு வந்துடறோம், நீங்க இங்கேயே இருங்கன்னேன். அதுக்கும் ‘சரி'ன்னார் அந்த அப்பாவி..."