பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 நிறைந்திருந்தது. அந்த இடத்தில் தான், முதலா வதாக ஒரு செப்புச் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டது. 1910ஆம் ஆண்டில், செப்புப் படிவம் இருப்பது இந் நாட்டின் பல பகுதிகளிலும் தெரியத் தொடங்கிற்று. 1920ல் இக்கனிப் இக்கனிப் பொருளை வெட்டியெடுக்கும் முயற்சி பெரிய அளவில் மேற் கொள்ளப்பட்டது. காடுகளை வெட்டினார்கள்; கனியை எடுக்கும் இயந் திரங்களை வரவழைத்தார்கள்; வெடி வைக்கும் இயந் திரங்களைக் கொண்டு, சுரங்கத்தைத் தோண்டினார்கள். 200அடி ஆழத்துக்குக் கீழே துளைக் கருவிகளைப் பொருத் தினார்கள். புவியியல் ஆராய்ச்சி நிபுணர்களின் உதவி யுடன் சோதனைகள் செய்யப்பட்டன. பாறைகளை வெடி வைத்துப் பிளக்க மின்சாரம் பயன்பட்டது. புதிய சுரங்கங்களைக் கண்டு பிடிக்க எலிக்காப்டர் விமானங் பயன்படுத்தப்பட்டன. தாமிரச் சுரங்கங்கள் உள்ள பகுதிக்கு, ஆப்பிரிக்கத் தாமிர வளையம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. கள் ஒவ்வொரு சுரங்கப் பகுதியருகேயும், அலுவலகக் கட்டடங்கள் அழகாக அமைக்கப்பெற்றன. அலுவலர் வீடுகளும் தொ ழிலாளர் குடியிருப்புக்களும் கடைகளும் மருத்துவ மனைகளும் கட்டப்பெற்றன. சுரங்கங் களுக்குள் பள்ளங்களில் பூமிக்கடியில் குடைந்தெடுத்து 900 மைலுக்கு ஓடைகள் உருவாக்கப்பெற்றன. 1930 அளவில் உலகப் பொருளாதார நிலையில் ஒரு மந்தம் ஏற்பட்டது. தாமிரத்தின் விலையும் வீழ்ச்சி யடைந்தது. அதனால் சில சுரங்கங்கள் மூடப்பட்டன. 1933ல் நிலைமை மாறிற்று. புதிதாகப் பெரிய சுரங்கங்கள் தோண்டப் பெற்றன. ஆங்கிலேயரும்