பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வட ஆப்பிரிக்காவிலிருந்து தென் ஆப்பிரிக்கப் பகுதிகளுக்குச் செல்வதற்குரிய வழியாக ஜாம்பியா இருந்து வந்திருக்கிறது. இதனால் அவ்வப்போது வலுவாக இருந்தவர்கள் இப்பகுதியைத் தாக்கி வந்திருக்கின்றனர். இவ்வாறு இங்கு வந்த பண்டு இனத்தவரின் வழிவந்த சில ஆயிரம்பேர் இன்றும் ஜாம்பியாவில் உள்ளனர். ஜாம்பியாவில் உள்ள ஆப்பிரிக்கரின் தொல் மரபு இனங்கள் 73 ஆகும். இவ்வினத்தார் அனைவரும் பல படையெடுப்புக்களின் போது குடியேறியவர்களே. இவர்கள் செப்பும் மொழி களின் எண்ணிக்கை முப்பது. அவற்றுள் குறிப்பிடத் தக்க மொழிகள் ஏழு மட்டுமே. ஐரோப்பியர் தொடர்பு 1798-ல் நம் நாட்டுக்கு வாஸ்கோட காமா வந்த ஆண்டில் ஒரு போர்த்துக்கீசியர் அங்கோலாவுக்கும் அதன் அண்டை நாடான ஜாம்பியாவுக்கும் வந்தார். அவரைத் தொடர்ந்து, போர்த்துக்கீசிய வணிகர் பலர் ஜாம்பியாவுக்கு வந்தனர். 1800 அளவில் டேவிட் லிவிங்ஸ்டன் என்ற ஆங்கி லேயர் ஜம்பேசி ஆற்றுப் பகுதியையும் விக்டோரியா அருவிப் பகுதியையும் விரிவாக ஆராயத் தொடங் கினார். அவர், 20 ஆண்டுகளுக்கு மேல் இப்பணியிலேயே ஈடுபட்டு இப்பகுதியைப் பற்றி அறிவுலகம் அறியச் செய்தார். களில் லிவிங்ஸ்டனுடைய அறிக்கைகள் ஐரோப்பிய நாடு வாழ்பவர்கள் கண்ணைத் திறந்துவிட்டன. பொருள் சேர்க்கும் ஆசையையும் மதம் மாற்றும் ஆர் வத்தையும் அவர்களிடையே தூண்டிவிட்டன. செசில்