பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலாவி உலகம் பலவிதம். அதில் மலாவி ஒரு விதம் என்று சொல்லலாம். ஐந்து விரல்களும் அடுத்தடுத்து இருந்தாலும் அவைகளுள் ஒன்றுக்கொன்று எவ்வளவோ வேறுபாடு இருப்பதுபோல, ஆப்பிரிக்க நாடுகளுக்குள்ளும் வேறு பாடு நிலவுகிறது. ஒவ்வொரு ஆப்பிரிக்க நாட்டிலும் ஆப்பிரிக்க ருக்குள் ஏராளமான இனத்தவர் இருக்கிறார்கள். ஓர் இனத்தவரும் பிறிதொரு இனத்தவரும் எலியும் பூனையுமாக இருப்பார்கள். பல இனத்தவர் வாழ்ந் தாலும் ஆப்பிரிக்கருக்குள் பூசல் இல்லாத நாடு, மலாவி. கறுப்பர், வெள்ளையர் ஆகிய இரு பிரிவினரும் கீரியும் பாம்பும் போன்று நடந்து கொள்வதும் ஒரு வரை யொருவர் சந்தித்தால்கூட தீட்டு ஏற்பட்டு விடும் என்று நினைப்பதும் ஆப்பிரிக்கா வெங்கும் நடை முறையாக இருக்கிறது. இந்தப் போக்கு இல்லாத நாடு, மலாவி. பொருளாதாரக்கொள்கைகள் மக்களின் தேவைக் கும் நாட்டின் நிலைக்கும் ஏற்ப அமைய வேண்டும். ஆனால் ஆப்பிரிக்க நாடுகள் அரசியல் சதுரங்க விளை யாட்டிலே அகப்பட்டுக் கொண்டு விடுகின்றன. அதற்கு மாறாக, நாட்டு, மக்களின் நலங்கருதி, தென் ஆப்பிரிக்காவுடன் வணிக உறவு கொண்டுள்ள நாடு மலாவி.