பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்த்துக்கீசிய ஆட்சியிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் ஆப்பிரிக்காவின் தென் கோடியைக் கண்ட கடற் படை வீரர்களில் வாஸ்கோடகாமா முதலிய வீரர்கள் முன்னணியில் இருந்தனர் இதனால் போர்ச்சுக்கல் நாடு, 15-ம் நூற்றாண்டு முதல் ஆப்பிரிக்காவின் தென் பகுதிகளில் செல்வாக்குப் பெற்றிருந்தது. 19-ம் நூற்றாண்டு வரை போர்த்துக்கீசியர் செல் வாக்கு, கடலோரப் பகுதிகளில் மட்டுமே இருந்தது. பின்னரே உள்நாட்டிலும் இவர்களுடைய செல்வாக் குப்பரவியது. போர்த்துக்கீசியர் ஆட்சியிலடங்கிய ஆப்பிரிக்கப் பகுதிகள் அங்கோலாவும் மொசாம்பிக்கேயும். இவ் விரண்டையும் தனித்தனியே விவரிக்குமுன் இவற்றின் பொது இயல்புகளைக் கூறுவோம். போர்ச்சுக்கல், ஐரோப்பாவில் இருந்தபோதிலும், பிற நாடுகளைவிடச் செல்வாக்கும் செல்வமும் குறைந்த நாடு. ஐரோப்பாவின் ஒரு மூலையில் இருப்பதால், அப்பெரு நிலப்பரப்பில் ஏற்பட்ட மாறுதல்களால், புரட்சிகளால், முன்னேற்றங்களால் பாதிக்கப்படாத நாடு. எனவே தொழில் வளர்ச்சியில் இந்த நாடு முன்னின்று விளங்கவில்லை. அங்கோலாவிலும் மொசாம்பிக்கேயிலும் உரம், செட்புச் சுரங்கம், கப்பல் கட்டுவது, மீன் பிடிப்பது- இத்தொழில்களில் மட்டுமே போர்த்துக்கீசியா ஈடுபட்