பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 டனர். பிற தொழில்களெல்லாம் ஏனைய ஐரோப்பிய நாட்டினரிடமும் அமெரிக்கரிடமும் விடப்பட்டன. இரயில், தொலைபேசி போன்ற நிறுவனங்கள் ஆங்கி லேயராலேயே நடத்தப்பட்டன. செப்புத் தவிர பிற சுரங்கங்கள் பெல்ஜிய நாட்டினரால் இயக்கப்பெற்றன. ஆப்பிரிக்காவில் சில பகுதிகள் பிரிட்டிஷாரிடம் இவர்கள் பரிமாறிக்கொண்டு பெற்றவையே. பம்பாய் நகர்ப்பகுதி போர்த்துச்கீசியரிடம் இருந்ததும் ஆங்கி லேய அரசன் ஒருவனை மணந்த போர்த்துக்கீசிய இளவரசிக்குச் சீர் வரிசையாக அந்நகரம் வழங்கப் பெற்றதும் வரலாற்று நிகழ்ச்சிகளாகும். பிற நாட்டவரைப் போலன்றித் தாங்கள், ஆப் பிரிக்க மக்களுடன் நெருங்கிப் பழகியிருப்பதைப்பற் றிப் போர்த்துக்கீசியர் பெருமைப்படுகின்றனர். 19-ம் நூற்றாண்டுக்கு முன், ஆடவர் மட்டுமே போர்சுக்கல்லி லிருந்து ஆப்பிரிக்காவுக்கு வந்தனர். அவர்கள் ஆப்பி ரிக்கப் பெண்களுடன் உறவு கொண்டனர். இக்கலப் பால் 'முலாட்டோ' என்ற இனம் தோன்றிற்று. இதைப் பற்றி அவர்கள் கூறுவ தாவது: கடவுள் வெள்ளையரைப் படைத்தார். கடவுள் கறுப்பரைப் படைத்தார். போர்த்துக்கீசியர் முலாட்டோவைப் படைத்தனர். இதை மறுத்து, சொல்லுகிறார்கள். ஆப்பிரிக்கர் பின் வருமாறு கடவுள் ஆப்பிரிக்கரைப் படைத்தார் கடவுள் முலாட்டோவைப் படைத்தார் ஆனால் பிசாசு போர்த்துக்கீசியரைப் படைத்தது. போர்த்துக்கீசியர், பிற ஐரோப்பிய நாட்டினரை விட, ஆப்பிரிக்காவில் உரிமை கொண்டாடுகின்றனர்.