பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fountain. 'ஊழலின் ஊற்றுக்கண்ணை அடைத்துவிட வேண்டும்'. ஊற்றுதல் வி. (v.) I. நீர்மப் பொருள் களைக் கீழே சாய்த்துக் கொட்டுதல்; pour (water or other liquids). 'தண்ணீரைக் கீழே ஊற்றினார் . 2. ஒரு கலனுக்குள் நீர்மத்தை விடுதல்; fill (something with a liquid). தூவலில்மை ஊற்றினார்.3. செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல்; water (the plants). பூஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்றினாள். 4. நீர்மப்பொருள் அதிகளவில் வெளியேறுதல் பொழிதல்; comcout profusely; (of rain) pour down. மழை ஊற்றியதால் வெள்ளம் பெருக் கெடுத்தது '.5.(அரைத்த மாவை) வார்த்தல்; pour (butter to make dosa, etc.,). 'தோசை ஊற்றினாள். 6. கவனக் குறைவால் சிந்துதல்; spill; splash. தேநீரைக் காலில் ஊற்றிவிட்டார். ஊறல் பெ. (n.) I. வெறிதீர் (சாராயம்) உருவாக்குவதற்காக ஊமத்தை,

கடுக்காய்க் கொட்டை, நறுக்கிய வாழைப்பழம் போன்றவை சேர்க்கப் பட்டு காய்ச்சி வடித்தெடுக்கும் நீர்; anything fermenting for distillation of arrack; (a kind of) fermenting wash. 2.ஊரல் பார்க்க.

ஊறு பெ.(n.) தீங்கு; ham. உடலுக்கு ஊறு செய்யும் பொருள்களை உண்ணக்கூடாது'.

ஊறுகாய் பெ. (n.) உப்பிட்டு ஊற வைத்த காய்; உணவோடு சிறு அளவில் சேர்த்துக்கொள்ளும் தொடுகறி;

pickle.

ஊறுகாய் போடுதல் வி. (v.) குறிப்பிட்ட பொருளைப் பயன்படுத்த வேண்டிய வற்றுக்குப் பயன்படுத்தாமல் சும்மா வைத்திருத்தல்; (said jocularly or mockingly) keep (esp. hoarded things) untouched. மிதிவண்டியை ஓட் டாமல் வைத்திருக்கிறாயே எதற்கு? ஊறுகாய் போடவா?.

ஊன்றுதல்

107

ஊறுதல் வி. (v.) 1. நீர், எச்சில் முதலியன வெளிவருதல்; சுரத்தல்; (of water) spring (of saliva, enzyme, etc.,) secrete. கிணற்றில் நீர் ஊறட்டும்'. 2. அரிசி, பகுப்பு முதலிய பொருள்கள் தனைந்து மென்மையாதல்; be soaked. அரிசி ஊறிவிட்டதா?'. 3. துணி நீரில் தனைதல்; be soaked. 'துணியை ஊற வைத்திருக்கிறேன். 4. தாள், துணி முதலியவற்றில், நீர், மை போன் றவை பரவுதல்; (of water, ink) spread, (on a surface such as cloth, paper, etc.,) smudge. 'மை ஊறும் தாள்'.5.குறிப் பிட்ட உணர்வு, பழக்க வழக்கம் போன்றவற்றில் மனம் தோய்தல்; be soaked or immersed (in habits); be steeped in. 'தேசப்பற்று என்பது அவர் குருதியில் ஊறிப் போய்விட்டது'.

ஊன் பெ. (n.) 1. உணவாக உட்கொள்

ளப்படும் விலங்குகளின் அல்லது பறவைகளின் இறைச்சி; புலால்; meat. 'ஊன் உண்ணும் வழக்கத்தை அவர் கைவிட்டார். 2. மாந்த உடல்; human body. 'ஊனும் உயிரும் வருந்த உழைத்தார்.

ஊன்றி வி.எ.(adv.) I. உற்று, உன்னிப்பாக; keenly, intently. 'ஊன்றிக் கவனித் தார். 2.ஆழ்ந்து; கூர்ந்து; deeply.

'நூலை ஊன்றிப் படிக்க வேண்டும்'. ஊன்றுதல் வி. (v.) I. உடல் குறிப்பிட்ட நிலையில் இருப்பதற்காகக் கை யையோ, காலையோ, கம்பையோ ஓரிடத்தில் அழுத்தமாகப் பதித்தல்; plant firmly (one's hand, foot, stick, etc, for support). கையை ஊன்றி எழுந்தார்.2. விதையை நிலத்தில் ஆழமாகப் பதித்தல்; செடி, கம்பம், தாற்று போன்றவற்றை நடுதல்; plant (seeds, seedlings); fix (a post in a pit). செடியை ஊன்றி காப்பாக வளர்த் தார் . 3. பதிதல்; நிலை கொள்ளுதல்;