பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைதல் வி. (v.) 1. பெறுதல்; attain, get. 2. ஓர் இடம் சென்று சேர்தல்; reach a destination. 3. குறிப்பிட்ட அகவையை எட்டுதல்; reach. 4. தூசி, அழுக்கு சேர்தல்; (of dust, dirt) collect. வீட்டில் தூசி அடைகிறது'.5. பறவைகள், பூச்சிகள் போன்றவை ஓர் இடத்தில் தங்குதல்; settle (of birds) rest (of bugs etc.,) settle thickly on something. தோட்டத்தில் புதர் இருந்தால் பாம்பு அடையும். 6.கடன் மற்றும் நிலுவை தீர்தல்; of debits, arrears be cleared, be paid up. அடைந்துகிடத்தல் வி. (v.) வெளியே செல்லாது வெளியாரின் பார்வையில் படாமல் எப்போதும் ஒரே இடத்தில் இருத்தல்; stay confined to a place. அடைப்பிரதமன் பெ. (n.) கன்னலமுது வகை; a kind of porridge. அடைப்பு பெ. (n.) 1. மூடுகை; shutting, closing, stopping. 2. வேலி; fence, enclosure. 3. தடை; obstruction. 4. அடைக்கும் மூடி; plug, stopper, cork. 5. படற்கதவு; door or small gate of braided palm. அடைப்புக்குறி பெ. (n.) ஒரு வாக்கியத்தில் கூடுதல் தரவுகளை அல்லது கணிதத்தில் சமன்பாடு போன்ற வற்றின் பகுதியாக அமைவதைக் குறிக்கப் பயன்படும் பிறை வடிவ அல்லது பகர வடிவக் குறியீடு; brackets. அடைமழை பெ. (n.) விடாமழை, அடைத்துப் பெய்யும் மழை; continuous rain from an overcast sky. அடைமழையில் நாற்று நட்டால் ஆற்றோடு போகும் (பழ.)' அடைமானம் பெ. (n.) அடமானம் பார்க்க. அடைமொழி பெ. (n.) சிறப்பு கருதி ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு வழங்கும் சொல் அல்லது தொடர்; அண்டிப்பிழைத்தல் tittle, epithet. 11 'சிந்தனைச் சிற்பி என்னும் அடைமொழி இவருக்குப் பொருந்தும்'. அடையாள அட்டை பெ. (n.) ஒருவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது புகைப்படம், பெயர், முகவரி போன்றவற்றைக் கொண்ட சிறு அட்டை; identity card. அடையாள அணிவகுப்பு பெ. (n.) இழப்புக்குட்பட்டவர் அல்லது சாட்சி சொல்பவர் குற்றவாளியை அடை யாளம் காட்டுவதற்காக ஐயத்திற்கு உரியவர்களை வரிசையாக நிற்க வைத்து அடையாளம் காட்டச் செய்தல்; Identification parade அடையாளம் பெ. (n.) அறிகுறி ; symbol, sign. அடையாளம் காட்டுதல் வி. (v.) பிறர் அறிந்திராத ஒன்றை இனங்கண்டு பிறருக்குத் தெரியப்படுத்துதல்; identify something or someone to others. அண்டக்கட்டுதல் பெ. (n.) 1. வீங்குதல்; to swell as on account of a boil. 2. முட்டித் தாங்க வைத்தல்; to prop up, support. அண்டங்காக்கை பெ. (n.) மிகக் கருப்பாக இருக்கும் பெரிய காகம்; large black jungle crow, raven. அண்டப்புளுகன் பெ. (n.) அப்பட்டமாகப் பொய்சொல்பவன்; monstrous liar. அண்டப்புளுகு பெ. (n.) அப்பட்டமான பொய்; bare faced lie. அண்டை அயல் பெ. (n.) அக்கம்பக்கம்; vicinity. அண்டைவீடு பெ. (n.) அக்கம்பக்கத்து வீடுகள்; neighbouring houses. அண்டிப்பிழைத்தல் வி. (v.) ஒருவரைச் சார்ந்து வாழ்தல்; to live depending someone.