பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

சூறை

சூறை பெ. (n.) 1. சுழல்காற்று; whirlwind. 2. கொள்ளை; decoity. சூறைக்காய்விடுதல் பெ. (n.) 1.ஊர் வலத்தின்போது நிலக்கடலை, முந்திரிக்கொட்டை முதலியவற்றை வாரி இறைத்தல்; to throw edibles during procession. 2. சிற்றூர்த் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் பொருட்டு சிதறு தேங்காய்

உடைத்தல்; to break coconut on a vow to village deity.

சூறைக்காரன் பெ. (n.) கொள்ளையடிப்

பவன்; robber, plunderer.

சூறைக்காற்று பெ. (n.) சுழல் காற்று; whirl wind.

சூறைத்தேங்காய் பெ. (n.) நேர்த்திக் கடனாகத் தெய்வத்தின் முன்னி லையில் உடைக்கும் சிதறு தேங்காய்; coconuts dashed on the ground before a shrine in fulfilment of vow. சூறையாடுதல் வி. (v.) கொள்ளை யடித்தல்; to plunder, pillage.

செ

செக்கச்சிவத்தல் வி. (V.) மிகச் சிவத்தல்; to be deep red. "சினத்தால் அவனது முகம் செக்கச் சிவப்பாயிற்று'. செக்காடுதல் வி. (v.) செக்கில் அரை படுதல்;

to be pressed in oil - press. செக்கிழுத்தல் வி. (v.) சிறைத் தண்டனை யின் ஒரு பகுதியாக மாட்டிற்குப் பதிலாக மனிதர்கள் எண்ணெய்ச் செக்கை இழுத்தல்; to work on the oil press by pulling the yoke instead of bull. 'இந்திய விடுதலைப்போரின் போது கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் கோவைச் சிறையில் செக்கிழுத்தார். செக்கு பெ. (n.) மரத்தாலோ கல்லாலோ ஆன பெரிய உரல் போன்ற

அமைப்பின் நடுவில் பொருத்தப் பட்டுள்ள உலக்கை போன்ற தடியை மாடுகளைக் கொண்டு வட்டமாகச் சுழலச் செய்வதன் மூலம் வித்து களிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் பொறி;

a country oil-press. செக்குலக்கை பெ. (n.) செக்கு உலக்கை போல நின்று மெதுவாகச் சுறுசுறுப் பின்றி வேலை செய்பவன்;

a person working very slowly like the shaft used in the oil - press. 'வேலையைச் சுறுசுறுப்பின்றிச் செய்வதால் அவளுக்குச் செக்கு உலக்கை என்பது பட்டப்பெயர்.

செங்கலறுத்தல் வி. (v.) ஈரமண்ணி லிருந்து செங்கல் வார்த்தல்; to make brick with wet clay.

செங்கற்சல்லி பெ. (n.) தளம் போடுவதற் காகவும், தட்டைக் கூரை மீது போடுவதற்காகவும் உடைக்கப்பட்ட செங்கல் துண்டுகள்; broken brick jelly for flooring and weathering course over that roof.

செங்கற்சூளை பெ. (n.) உலர்ந்த களிமண் பாளங்களை (செங்கற்கள்) இடை வெளியிட்டு அடுக்கி, அதில் மரத் துண்டுகள் இட்டு, எரித்துச் சுடும் அமைப்பு; stack of dried bricks with wooden blocks as fuels to burn kiln.

செங்காடு பெ. (n.) சிவந்த காட்டு நிலம் (வின் );red soil.

செங்காய் பெ. (n.) பழுக்கும் முன்பருவத் துள்ள காய்; fruit almost ripe. செங்குத்தாய்விழுதல் வி. (v.) தலை குப்புற விழுதல்; to fall head long. 'மலை மீதிருந்து செங்குத்தாய் விழுந்ததால் மண்டை உடைந்து அவன் மடிந்தான்'. செங்கோல் பெ. (n.) அரச இலச்சினை பொறிக்கப்பட்ட அரசாட்சிச் சின்ன மாகிய நேர்கோல்; sceptre, a symbol of sovereignty.