பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைக்கப்பட்ட ஒன்றின் தொடங் கும் இடம் அல்லது முடியும் இடம்; beginning or end part (of a rope, street, etc.,). 4. தலைமையான பல தெருக்கள் சேரும் சந்திப்பு; corner, junction. 'பாரிமுனை. 5. பரந்த நிலப்பரப்பு குவிந்து கடலில் முடியும் இடம்; cape. முனைப்பு பெ.(n.) ஒரு செயல், பணி போன்றவற்றில் காட்டும் ஆர்வம், கவனம், மும்முரம்; determination, drive. 'நம் அணியினர் இன்னும் சற்று முனைப்பாக விளையாடியிருந்தால்

வெற்றிபெற்றிருக்கலாம்'.

முனையம் பெ. (n.) I. வானூர்தி நிலை யத்தைக் குறிப்பிடும்போது ஒரே சமயத்தில் பல ஊர்திகள் இறங்கத்தள ஏந்து கொண்ட நிலையம்; (airport) teminal. 2. துறைமுகத்தில் குறிப்பிட்ட வகைக் கப்பல்கள் வரும் துறை; terminal.

முனைவர் பெ. (n.) குறிப்பிட்டதுறையில் ஆராய்ச்சி செய்து பல்கலைக் கழகத்துக்கு ஆய்வேடு அளித்துப் பெறும் உயரிய பட்டம்; Doctor of Philosophy.

மூ

மூக்கடைப்பு பெ. (n.) நீர்க் கோவை யினால் மூக்கில் சளி அடைத்துக் கொண்டு மூச்சுவிடத் துன்பப்படும் நிலை; congestion of the nose. மூக்கடைப்பைப் போக்குவதற்காக ஆவிபிடித்துக் கொண்டிருந்தாள்' மூக்கணாங்கயிறு பெ. (n.) மாட்டின் மூக்கில் நுழைத்துத் தலையைச் சுற்றிக் கட்டியிருக்கும் கயிறு; rope or string drawn through the bridge of the nose of a bullock (as a bridle). மூக்கணாங் கயிற்றைப் பிடித்து இழுத்ததும் மாடு நின்றது. மூக்கறுத்தல் வி. (v.) ஒருவரை அவமானப்படுத்துதல்; humiliate, snub. தேவையில்லாமல் அவனிடம் சண்

மூக்குத்தி

407

டைக்குப் போனதால் எல்லோர் முன்னிலையிலும் உன்னை மூக்க றுத்துவிட்டான்'.

மூக்கறுபடுதல் வி. (v.) அவமானப் படுதல்; be snubbed. 'பக்கத்து வீட்டுக்காரருக்காக முறைமை (ஞாயம்) பேசப் போய் மூக்கறு பட்டுப்போனேன்'.

மூக்கால் அழுதல் வி. (v.) I. ஒருவர் தன் குறையைக் கூறிப் புலம்புதல்; whine. எப்போது பார்த்தாலும் கையில் காசு இல்லை என்று மூக்கால் அழுகிறான். 2.ஒன்றைச் செய்யவோ பிறருக்குத் தரவோ மனமில்லாமல் இருத்தல் அல்லது தயங்குதல்; grudge, grumble. இந்தச் சின்ன வேலையைச் செய் வதற்குக்கூட மூக்கால் அழுகிறாயே. மூக்கால் ஓடுதல் வி. (v.) அதிகக் காரம் சாப்பிடுவதால் மூக்கிலிருந்து நீர் வடிதல்; have a running nose (caused by hot food).

மூக்கில் வியர்த்தல் வி. (v.) ஒருவர் பிற ருக்குத் தெரிந்திருக்காது என்று நினைக்கிற செய்தியை மற்றொருவர் எப்படியோ தெரிந்துவைத்திருத்தல்; get to know in an uncanny way, sniff something out.

மூக்கில் விரலை வைத்தல் வி. (v.) ஒன்றை அல்லது ஒருவரைப் பார்த்து வியந்து போதல்; be impressed. ஆசிரியரே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்குச் சிறுவன் விடை யளித்தான்.

மூக்குக்கண்ணாடி பெ.(n.) பார்வைக் குறையை ஈடு செய்வதற்காக அணியும் கண்ணாடி; pair of spectacles. மூக்குடைபடுதல் வி. (v.) மூக்கறுபடுதல் பார்க்க.

மூக்குத்தி பெ. (n.) பெண்கள் மூக்கு நுனியின் பக்கவாட்டுப் பகுதியில்