பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

வசங்கெட்டவன்

state of things. 2. ஏதாவதொரு பழக்கத்திற்கு அடிமையானவன்; man addicted to a habit.

வசங்கெட்டவன் பெ. (n.) 1. செயலற் றவன், ஆண்மையற்றவன்; impotent man. 2. நிலைமை கெட்டவன்; man in reduced circumstances. வசப்படுத்துதல் வி. (v.) தனது உரிமையின் (அ) பொறுப்பின் கீழ்க் கொண்டு வருதல்; bring under one's control. வசப்படுதல் வி. (v.) குறிப்பிட்ட உணர்ச்சிக்கு (அ) மனநிலைக்கு ஆட்படுதல்; be in the grip of, be possessed by.

வசம் பெ. (n.) ஒருவரின் பொறுப்பு, கட்டுப்பாடு; castody, possession. வசம்பு பெ. (n.) செரியாமையால் ஏற்படும் வயிற்றுக் கோளாறு களுக்குப் பயன் படுவது; used as medicine.

வசமாக பெ. (n.) தப்பிக்க எந்த வாய்ப்பும் இல்லாத வகையில் சிக்கிக் கொள்ளுதல் ; inescapably. வசவு பெ. (n.) திட்டு, வசை; abuse, scolding.

வசை பெ. (n.) இழிவுபடுத்தும் பேச்சு, திட்டு; abuse, slanderous talk. வசைபாடுதல் வி. (v.) இழிவுபடுத்தும் வகையில் பேசுதல், திட்டுதல்; abuse. வஞ்சகம் பெ.(n.) ஒருவரை தம்பச் செய்து, தீங்கு விளைவித்துப் பயனடையச் செய்யும் (தந்திரம்) நுண்ணுத்தி; deceit.

வஞ்சகன் பெ. (n.) வஞ்சக எண்ணம் கொண்டவன் (அ) வஞ்சகமான செயல்களைச் செய்பவன்; dishonest

man.

வஞ்சப்புகழ்ச்சி பெ. (n.) ஒருவரைப் புகழ்வதுபோல் இகழும் செயல்; an ironic praise.

வஞ்சம் பெ. (n.) பழி தீர்த்துக் கொள்ளும் எண்ணம் (அ) செயல்; revenge.

வஞ்சம் தீர்த்தல் வி (v.) பழி தீர்த்தல்; take revenge.

வஞ்சனை பெ. (n.) வஞ்சகம், கபடம்; deceit, cunning.

வஞ்சித்தல் வி. (v.) நம்பச் செய்து கைவிடுதல் ஏமாற்றுதல்; betray, cheat cruelly.

வட்டம் பெ. (n.) பந்து போன்ற வடிவமைப்பு; circle.

வட்டத்தலைப்பாகை பெ. (n.) வட்ட வடிவி லமைந்த தலைப்பாகை;

a kind of head-dress, round turban. வட்டத்தொப்பி பெ. (n.) வட்டவடிவில் அமைந்த தொப்பி; akind of round hat. வட்டமிடுதல்' வி. (v.) 1. பறவை, வானூர்தி முதலியன ஒரு இடத்தைச் சுற்றிவருதல்; hover, circle. 2. ஒருவரைத் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருத்தல்; hang around.

வட்டமிடுதல்' வி. (v.) I. பறவை, வானூர்தி முதலியன ஒரு இடத்தைச் சுற்றிவருதல்; hover, circle. 2. ஒருவரைத் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருத்தல்; hang around. வட்டமிடுதல் *வி. (v.) I. பறவை முதலியன சுற்றி வருதல்; to hover about, as a hawk. 2.உருண்டையாதல்; to be round or globular. 3. நோக்கங் கொண்டு சுற்றுதல்; to hang about in order to gain an object, to round about with a view to gain something.

வட்டமேசைமாநாடு பெ. (n.) தனிப்படக் கூட்டிய ஆய்வுக் கூட்டம்; round table conference for specific purpose. வட்டாட்சியர் பெ. (n.) ஒருவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருக்கும் வருவாய்த்துறை அதிகாரி; tahsildar. வட்டாரம் பெ. (n.) குறிப்பிடப்படும் இடமும் அதைச் சுற்றிய பகுதியும்; region.