பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார மொழி பெ. (n.) அந்தந்த மாநிலங்களில் பேசப்பட்டு வரும் மொழி; regional language.

வட்டார வழக்கு பெ. (n.) ஒலிப்பு முறை, சொற்கள் பொது மொழியிலிருந்து வேறுபடுவதும் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்தவர்களால் மட்டும் பேசப்படுவதுமான மொழி வழக்கு; usage in a language variety or dialect. வட்டி பெ. (n.) கடன் தொகைக்குக் கூடுதலாகச் செலுத்த வேண்டிய தொகை; interest. வட்டியில்லாக்கடன் பெ. (n.) வட்டியின்றிக் கொடுக்குங் கடன் தொகை; interest free loan debt not carrying interest. வட்டு எறிதல் பெ. (n.) மாழையால் செய்த தட்டு போன்ற வட்டவடிவ கனமான கருவியை அதிக தொலைவு எறியும் விளையாட்டு; the discus. வட்டை பெ. (n.) வண்டிச் சக்கரத்தின் ஆரம் இணைக்கப்பட்டிருக்கும், மரத் தாலானதட்டையான வெளிப்பகுதி;

wooden rim of the wheel.

வடக்கயிறு பெ. (n.) தேர் முதலியவற்றை இழுக்கப் பயன்படும் தடித்த கயிறு;

large, stout rope or cable as for drawing a temple-car.

வடம் பெ.(n) கோயில் தேரை இழுக்கப் பயன்படுத்தப்படும் தடிமனான முறுக்குக் கயிறு; thick, twisted rope. வடம் பிடித்தல் வி. (v.) தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தல்; pulling the ropes. வடிகட்டி பெ. (n.) நீர்மம் மட்டும் வடியும் வகையில் நுண்ணிய துளைகளை யுடைய (கண்கள்) வலை அமைத்துத் உருவாக்கப்பட்ட கருவி; strainer. வடிகால் பெ. (n.) தீர் ஒரு பரப்பில் தேங்கி நிற்காமல் செல்வதற்காக அமைக்கப் படும் கால்வாய்; outlet, drainage. வடித்தண்ணீர் பெ. (n.) நாற்றங்காலில் நீர் கட்டி பின் வடிக்கட்டப்பட்ட தண்ணீர்;

drained water from seed-bed after properly irrigateing for a while.

வடிவமைப்பு

419

வடித்திறுத்தல் வி. (v.) தெளியவைத்து இறுத்தல்; to decant. வடித்துக் கொட்டுதல் வி. (v.) சமைத்துப் போடுதல்; slave over a hot stove. வடிதட்டு பெ. (n.) சோற்றிலிருந்து கஞ்சியை வடித்தெடுப்பதற்கு உதவும் முறையில் பாதிப்பரப்பில் மட்டும் துளைகளைக் கொண்ட மாழைத் தட்டு; a shallow metal plate with perforation used as strainer. வடிதல் பெ. (n.) நீர்மம் தொடர்ந்தோ (அ) சொட்டுச் சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்; drip. வடிதாள் பெ. (n.) வேதி நீர்மங்களை வடிகட்டுவதற்குப் பயன்படுத்தப் படும் நுண்ணிய துளைகள் கொண்ட தாள்; filter paper.

வடிநிலம் பெ. (n.) ஓர் ஆற்றின் கிளை ஆறுகளும் துணை ஆறுகளும் பாயும் பரப்புகளை உள்ளடக்கி இருக்கும் நிலப்பகுதி; basin, delta

வடிப்பான் பெ. (n.) தீர்மங்களிலிருந்து கசடுகளை வடித்தெடுக்கும் கருவி; filter.

வடிபாத்திரம் பெ.(n.) மருந்தெண்ணெய் வடிப்பதற்குப் பயன்படுத்தும்

வாயகன்ற மட்பாண்டம்; wide mouthed eartheren ware to hold or collect the medicated oil to be filtered.

வடிபானை பெ. (n.) சோறாக்குவதற்கான

மட்கலம்; earthen vessel for cooking rice. வடியெண்ணெய் பெ. (n.) வடித்தெடுத்த மருந்தெண்ணெய்; clarified medicinal

oil.

வடிவமைத்தல் வி. (V) கட்டடம் போன்ற வற்றுக்குக் குறிப்பிட்ட வடிவம் கிடைக்கும்படிச் செய்தல்; உருவாக் குதல்; design, model. வடிவமைப்பு பெ. (n.) உருவாக்கப்பட்ட வடிவம் (அ) தோற்றம்; design.