பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டுகாயப்போடுதல் வி. (v.) உப்பளப் பாத்தியிலிருந்து வாரியெடுக்கும் உப்பை, பாத்தியின் வரப்பி லேயே குவித்து, ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய்ச்சலிடுகை; drying process on the ridges of beds in salt pans by heaping. வண்டுகூட்டுதல் வி (v.) பாத்தியிலிருந்து உப்பை அவ்வரப்பிலேயே வாரிக் குவித்தல்; to heap salt on the ridge itself after collecting from salt beds.

வண்டுச்சொறி பெ. (n.) வண்டு கடிப்ப தினால் உண்டான சொறி; urticaria caused by sting of beetles.

வண்டு சுற்றுதல் வி. (v.) வைக்கோல் முதலியவற்றைப் புரியாக நெருங்கச் சுற்றிக் கட்டுதல்; to make twists of straw and pack them.

வண்டுவிடுதல் வி. (v.) வைக்கோல் முதலியவற்றைப் புரியாகத் திரித்தல்; to twist straw.

வண்ணம் பூசுதல் வி. (v.) வண்ணக் கலவையைப் பூசுதல்; tonub the colour or paint.

வண்ணாத்தி பெ. (n.) ஆடை வெளுக்கும் பெண் தொழிலாளி;

washer - woman. வண்ணான் பெ. (n.) ஆடைவெளுக்கும் தொழிலாளி; washeman.

வண்ணான்குறி பெ. (n.) ஆடைவெளுப் பவர் ஆடையில் இடும் குறி; mark given by washerman.

வண்ணானழுக்கு பெ. (n.) வண்ணா னிடம் வெளுக்கப் போடும் அழுக்கு ஆடைகள்; soiled or dirty clothes for washing.

வண்ணித்தல் வி. (v.) 1. புனைத் துரைத்தல்; to depict; describe. 2. போற்றி வணங்கிக் கூறுதல்; to praise, submissively.

வணக்கம் பெ. (n.) தாள் முதலில் சந்திக்கும் இருவர் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளும் மதிப்பு வாழ்த்துச் சொல்; verses in praise of guru etc.

வத்தி வைத்தல்

421

வணங்காமுடி பெ. (n.) யாருக்கும் பணிந்து நடக்காதவன்; recalcitrant person; stiff necked person.

வணங்குதல் வி. (v.) 1. (கடவுளை) வழிபடுதல்; worship, pray. 2. (மதிப்பு கொடுத்தலுக்காக ஒருவரைக் கண்டவுடன்) கை கூப்புதல் அல்லது வணக்கம் தெரிவித்தல்; greet (someone) with one's palms together). 3. ஒரு வேலையைச் செய்ய உடலளவில் அணியமாக இருத்தல்; be willing to exert oneself.

வணிகச் சின்னம் பெ. (n.) ஒரு வணிக நிறுவனம் தன் பொருள்களுக்குப் பயன்படுத்துவதற்காகப் பதிவு செய்து கொண்ட பெயர் (அ) சின்னம்; trade mark.

வணிகர் பெ. (n.) கொண்டுகொடுத்தற் தொழிற்செய்பவர்; merchant, trader. வத்தல் பெ. (n.) 1. பதப்படுத்திக் காயவைத்த சில வகைக்காய் வற்றல்; vegetable dried and kept to be used later. 2. அரிசிக்கூழ் முதலியவற்றை அச்சில் இட்டுப் பிழிந்து, உலர்த்தி எடுத்த துண்டுகள்; rice or sago paste processed by drying.

வத்தல்குழம்பு பெ. (n.) புளிக்கரைசலில் வத்தல் போட்டுச் செய்த குழம்பு; a sauce of thick tamarind solution with dried vegetable pieces. வத்தலும் தொத்தலுமாக வி. (v.) உடல் நலிந்தும் மெலிந்துமாக; in a thin and emaciated condition, being more skin and bones.

வத்தி வைத்தல் வி. (v.) 1. வெடி கொளுத்துதல்; to ignite the fuse. 2. சண்டை மூட்டுதல்; to stiru trouble. 3. புண்ணிற்குக் காரம் வைத்தல்; to apply a piece of cloth soaked with caustic to a sore.