பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

வருங்காலம்

வருங்காலம் பெ.(n.) இனி வரப்போகும் காலம், எதிர்காலம்; future; the time

to come.

2.

வருத்தம் பெ. (n.) 1. மனதிற்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளினால் உண்டாகும் துன்பம்; suffering, pain, grief. 2. இயற்கை எய்தியோர் குறித்து ஏற்படும் மன உணர்வு; regret. வருத்துதல் வி. (v.) I. வருந்தச் செய்தல்; to cause, pain, to afflict vex. துயரங்கொள்ளச் செய்தல்; துன்பப்பட வைத்தல்; to make one sad; to make one feel sorry. வருந்தியழைத்தல் வி. (v.) மிகவும் வேண்டிக் கூப்பிடுதல்; to invite emphaticaly, earnestly. வருந்தியேங்குதல் வி. (v.) ஒருவர்தம் ஈடுசெய்யவியலா இழப்பை எண்ணி யும், புலம்பியும் துன்பவுணர்வு கொள்ளுதல்; to feel sorry, to bemoan. வருந்துதல் வி. (v.) I. துன்பமுறுதல்; to suffer. 2. உடல் மெலிதல்; to become emaciated. 3. வருந்தி வேண்டிக் கொள்ளுதல்; to make suplication. வரும்படி பெ. (n.) வரவு, வருமானம்; income.

வருமானம் பெ. (n.) I. பணி, தொழில் முதலியவற்றால் கிடைக்கும் பணம்; professional or salaried income, source of income. 2. வரிகளின் வாயிலாக அரசிற்குக் கிடைக்கும் பணம்;

revenue.

வருமான வரி பெ. (n.) ஒருவருடைய ஆண்டு வருமானம் அரசு வரம்பீட்டு அளவுக்கு மேற்படுமானால் அந்த வருமானத்தின் மீது அரசு விதிக்கும் வரி;

income-tax.

வருவாய் பெ. (n.) வரும்படி, வருமானம்; income; revenue.

வரைதல் வி. (v.) I. கோடிழுத்தல், எழுதுதல்; to write, inscribe, to draw a line. 2. ஓவியமெழுதுதல்; to draw with paint.

வரைபடம் பெ. (n.) கோடுகளால் ஆன வரைபடம், ஓர் இடம், நாடு கட்டம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றைக்காட்டும் படம்; map; plan (of a building, etc.,); diagram; graph. வரைபலகை பெ. (n.) வரைபடம் வரைவதற்காகப் பயன்படுத்தும் செவ்வக வடிவ மரப்பலகை; drawing board.

வரையறுத்தல் வி. (v.) I. தீர்மானித்தல், அறுதியிடல், உறுதிசெய்தல்; to settlc, decide. 2. எல்லைப்படுத்துதல்; delimit. வரையறை பெ. (n.) ஒன்றின் தன்மை, தரம்,

அளவு, அமைப்பு போன்ற வற்றை வரையறுப்பது; definition, delimitation. வரையாடு பெ. (n.) மலைப்பகுதியில் காணப்படும் குறுகிய விறைப்பான காது, மேனோக்கி வளைந்த கொம்புகளைக் கொண்ட ஒரு வகை ஆடு; jungle sheep.

வரைவோலை பெ. (n) ஒரு வைப்பகம் மற்றொரு கிளைக்குப் பிறப்பிக்கும் எழுத்து மூலமான பணம் வழங்கும் ஆணை; a bank draft, demand draft. வல்லந்தம் பெ. (n.) I. வலுக்கட்டாயம், வலக்காரம்; compulsion. 2. உரம், வலிமை; power, energy.

வல்லரசு பெ. (n.) பொருளியலில் (அ) வலிமை மிகு படைத்திறனில் மிக்க நாடு; country of predominance in economy or in military: super power country.

வல்லவன் பெ. (n.) 1. வலிமையுள்ளவன்; strong or heroic man. 2. திறமைசாலி, ஆற்றலுள்ளவன், பொருத்தமான வன்; capableman, suitable man, man of ability.

வல்லுநர் பெ. (n.) ஒரு குறிப்பிட்ட துறையில் நுண்திறமையுடையோர்; expert. வலங்கொள்ளுதல் வி. (v.) இடவலமாக வருதல்; circumambulation from left to right. வலசைபோதல் வி. (v.) குறிப்பிட்ட பருவங்களில் பறவைகள் இடம் பெயர்தல்; migration.