பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

வழிபாடு

வழிபாடு பெ.(n.) வணங்கும் செயல், நேர்த்திக்கடன்; prayer, worship. வழிமறித்தல் வி. (v.) செல்வதைத் தடுத்தல்; to stop, obstruct, hinder or prevent, as a person from going. வழிமுறை பெ. (n.) ஒன்றை முறையாகச் செய்வதற்காகவோ பின்பற்று வதற்காகவோ இருக்கும் வழி; proper way method (of doing something). வழிமொழிதல் வி. (v.) ஓரமைப்பின் கூட்டத்தில் ஒருவர் முன் மொழிந் ததற்குத் துணைதருதல் பொருட்டு மற்றொருவர் கூறுதல்; second (a motion, propasal, etc.,). வழியடைத்தல் வி. (v.) I. மேலும் செல்ல வொட்டாது வழியைத் தடை செய்தல்; to obstruct or hinder or present or wall the way. 2. தடுத்தல்; to raise obstacles in the way of; to impede, to felter, to stop, prevent, hinder. வழியனுப்புதல் வி. (v.) வெளியூர் (அ) வெளிநாடு செல்லும் விருந்தினருக்கு உறவினர், நண்பர் ஆகியோருக்கு விடை கொடுத்து அனுப்புதல்; see some one off, bid farewell.

வழிவகை பெ. (n.) ஒரு குறிப்பிட்ட ஒன்று நிகழ்வதற்கான ஏற்பாடும், வழி

முறையும்; ways and means, provisions. வழிவழியாக வி.(v.) பழக்கவழக்கங்கள், தொழில் முதலியவை முதல் தலை முறையிலிருந்து அடுத்தது என்ற வகையில், கொடிவழியாக; from generation to generation. வழிவிடுதல் வி. (v.) ஒன்று (அ) ஒருவர் செல்வதற்குத் தடையாக இல்லாமல், விலகி வழி ஏற்படுத்தித் தருதல்; make way (for somebody).

வழுக்கல் பெ. (n.) 1. சறுக்குகை; slipperiness. 2. சறுக்கலான தரை; slippery ground.

வழுக்கிவிழுதல் பெ. (n.) வாழ்க்கை நெறியிலிருந்து பிறழ்ந்து போதல்; to

go away from the correct path or direction.

வழுக்குதல் வி. (v.) பிடிப்பு இல்லாமல் நழுவிச் சரிதல்; slip by slippery. வழுக்குமரம் பெ. (n.) மரத்தின் உச்சியில் வைக்கப்பட்டிருக்கும்

பரிசாக

பொருளைக் கைப்பற்றுவதற்காகப் போட்டியிட்டு ஏறும் எண்ணெய் தடவிய வழவழப்பான மரம்; greased pole, the competion of climbing on the greased pole.

வழுக்கை பெ. (n.) I. தலைமுடி ஓரளவுக்கோ (அ) முழுவதுமாகவோ உதிர்ந்த பின் மழமழப்பாகக் காணப்படும் தலைப்பகுதி; baldness. 2. இளம் தேங்காயின் உள்ளீடு; soft flesh of a tender cocount.

வறியோர்க்கு

வழுவுதல் பெ. (n.) உரிய ஒழுங்கு, கொள்கை, கடமை முதலியவற்றி லிருந்து தவறுதல்; fail (in one's duty, responsibility, deviate. வள்ளல் பெ. (n.) அவர்களின் தேவை அறிந்து பொருளோ பணமோ கொடுத்து உதவுபவர்; philanthropist. வளர்ப்புபிள்ளை பெ. (n.) I. மிகவும் விரும்பி வளர்க்கப்படும் பிள்ளை;

foster- child. 2. தத்துப் பிள்ளை; adopted child.

வளர்பிறை பெ. (n.) காருவாவிற்கு மறுநாளிலிருந்து வெள்ளுவா வரும் வரை நிலா வளரும் காலம்; waxing

moon.

வளரும் நாடு பெ. (n) பொருளியல், தொழில் போன்றவற்றில் முன் னேற்றமடைந்துக் கொண்டிருக்கும் நாடு; developing county. வளவளவென்று வி.அ. (v.) எழுத்து, பேச்சு போன்றவை சுருக்கமாக இல்லாமல், உரிய அளவை மீறியதாக இருத்தல்; unendingly, pointlessly.

வளாகம் பெ. (n.) அளவில் பெரிய நிறுவனங்கள், அலுவலகங்கள் முதலியவற்றின் சுற்றுச் சுவர்களுக்கு உள்ளாக அமைந்திருக்கும் பகுதி;

campus.