பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வுதாழ்வு பெ. (n.) ஒருவன் வாழ்க்கை யில் ஏற்படும் செல்வ நிலையும் வறுமை நிலையும்; prosperity and adversity.

வாழாதவள் பெ. (n.) I. வாழாவெட்டி

பார்க்க: 2. கைம்பெண்; widow வாழாவெட்டி பெ. (n.) கணவனோடு சேர்ந்து வாழப்பெறாதவள்; maried

woman not living with her husband, grass widow.

வாழைக்கன்று பெ. (n.) வாழை மரத்தின் கிழங்கினின்று உண்டாகும் இள வாழை; plantain sucker or shoot; plantain sapling.

வாழையடிவாழை பெ. (n.) இடையறாது தொடர்ந்து வரும் குலவழி மரபு; unbroken lineage as plantain suckers from one root.

வாழை வெட்டிக்கலியாணம் பெ. (n.) மூத்த மகனுக்குத் திருமணம் ஆகாதிருக்கும் பொழுது இளையவனுக்கு ஏற்பா டானால் வாழை மரத்தை முதல் மகனுக்குக் கட்டுவிக்கும் திருமணம் ; fictitious marriage of an elder brother with a plantain tree adomed as his bride in order to enable his younger brother to marry.

வாள்காரன் பெ. (n.) வாளால் மரம்

அறுப்பவன்; sawyer.

வாள்வாளெனல் பெ. (n.) அழுது கதறுதற் குறிப்பு; of howling, as of a dog. வாளிப்பு பெ.(n.) செழுமை; உருட்சி திரட்சி ; (of one's body) robustness. வானம் பார்த்தபயிர் பெ. (n.) பாசன வசதி யின்றிப் பருவ மழையினுதவியாற் புன்செய்நிலத்தில் விளையும் தவசம்; crops grown on dry lands with the help of seasonal rains and without any irrigational facilities.

வானரம் பெ. (n.) குரங்கு; monkey. < வானொலி பெ. (n.) ஒலிவாங்கிக் கருவி; radio.

விட்டகுறை

441

விக்கல் பெ. (n.) தொண்டை விக்குகை; hiccup.

விக்குதல் வி. (v.) I. விக்கலெடுத்தல்; to hiccup. 2. விம்மி நிறைதல்; to be super abundant, chokeful. 3. விக்கி வெளித்தள்ளுதல்; to hiccup,. bring out with interruptions of hiccups.

விசிறுதல் பெ. (n.) I. விசிறியாற் காற் றெழுப்புதல்; to fan. 2. வாள் முதலிய வற்றை வீசுதல்; to wave to and fro, brandish. 3. வலை முதலியவற்றை விரித்தெறிதல்; to fling, hurl cast, as a 4. சுழற்றுதல்; to whirl round. 5. கை முதலியன வீசுதல்; to swing as the arms in walking.

net.

விசுக்கிடுதல் வி. (v.) I. வெறுப்புக் கொள்ளுதல்; to become displeased. 2. மன வருத்தங் கொள்ளுதல்; to be pained at heart.

விசுக்குதல் வி. (v.) விரைந்து கைவீசுதல், விசிறுதல்; to fan.

விசும்புதல்வி. (v.) I. வெறுப்புடன் விலக்குதல்; to throw away in contempt, to toss aside, to cast away. 2. கயிறு முதலியவற்றைச் சுண்டி யிழுத்தல்; to draw tight, as a rope. 3. தேம்பி அழுதல்; to sob, cry. 4. மீறுதல்; to transgress. 5. செருக்குக் கொண்டிருத்தல்; to be proud or haughty.

விஞ்சுதல் வி. (v.) 1. மேலாதல்; to excel, surpass. 2. மிகுதியாதல்; to be

excessive.

விட்டகுறை பெ. (n.) முற்பிறவியில் செய்துவந்த வினையை முற்ற முடியாமல் இடையே விட்டுவிட்ட தால் இப்பிறப்பில் முன்னேற்றத் திற்குக் காரணமெனக் கருதும் வினைப்பயன்; deeds resulting from acts left incompletely performed in a previous