பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடியவிடிய பெ. (n.) இரவு முழுவதும்; all through the night.

விடியற்காலம் பெ. (n.) வைகறை; break of day, dawn.

விடியாமூஞ்சி பெ. (n.) தொடர்ந்து வரும் நல்வினைப்பயன் அற்றவ-ள்-ன்; unlucky person, one who never sees the end of one's troubles, inherited by bad action or 'Vinai'.

விடுகதை பெ. (n.) புதிர்; riddle, enigma. விடுகாது பெ. (n.) வளர்த்துத் தொங்க விடும் தொள்ளைக் காது;

perforated ear-lobe hanging loose without any jewel. விடுதலை பெ. (n.) 1. ஓய்வு; rest, retirement. 2. தொடர்பு நீக்கம்; release, deliverance. 3. தன்னுரிமை; liberty. விடுதலைப்பத்திரம் பெ. (n.) சொத்திற் பிறர்க்கு உரிமையில்லையென்பதை உறுதிப்படுத்தும் உறுதி ஆவணம்; release deed, deed of discharge as of mortgage etc.

விடுதி பெ. (n.) 1. தங்குமிடம்; lodging place, place of temporary residence; choultry.

விடுப்பு பெ. (n.) 1. நீக்கம்; separation. 2. துருவியறியுந்தன்மை;

inquisitive- ness. 3. புதுமையானது; that which is strange or curious. 4. விருப்பம்; desire. 5. தானாக எடுக்கும் விடுப்பு; leave. விடுபடுதல் வி. (v.) 1. நீக்கப்படுதல் ; to be left, to be abandoned, relinguished. 2. விடுதலையடைதல்; to be released liberated, as from bondage or prison. விடுமுறை பெ. (n.) I. அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில் முறை யாக அளிக்கும் ஓய்வுநாள்; holiday, vocation. 2. கோடை விடுமுறை; summer holiday. 3. கிழமை விடு முறை; weeky holiday.

விடுவித்தல் வி. (v.) 1. விடுதலை செய்தல்; to liberate, sct free, release. 2.உட்பொருளைக் கண்டு கூறுதல்; to explain, interpret, to solve, as a riddle. விடை பெ. (n.) I. மறுமொழி; answer, reply. 2.இசைவு (அனுமதி); liberty,

வித்தெறிதல்

443

leave, licence, permission. 3. அசைவு; movement, shaking. 4. மிகுதி; abundance, surplus. விடைக்கோழி பெ. (n.) தாயைவிட்டுப் பிரியக் கூடிய பருவத்துள்ள கோழிக் குஞ்சு; chicken old enough to roam about away from its mother hen. விடைகொடுத்தல் வி. (v.) I. மறு மொழி சொல்லுதல்; to answer. 2.இசைவு (அனுமதி) கொடுத்தல்; to grant leave or permission. விண்ணப்பக்கடுதாசி பெ. (n.) எழுத்து மூல விண்ணப்பம்; petition or written application.

விண்ணப்பக்காரன் பெ. (n.) 1. விண்ணப் பம் செய்வோர்; petitioner. 2. அரண் மனை முதலியவற்றில் காண வருபவர்களின் வரவைத் தெரி விக்கும் வாயிலோன்; usher, as in a court, whose duty is to announce visiters. விண்ணப்பதாரர் பெ. (n.) விண்ணப்பம் செய்பவர்; petitioner.

விண்ணப்பப் பத்திரம் பெ. (n.) எழுத்து மூலமான வேண்டுகோள்; written application or petition. விண்ணப்பம் பெ. (n.) I. பெரியோர்முன் பணிந்து கூறும் அறிவிப்பு; supplication respectful, or humble representation. 2. கடவுள் திருமுன்பு செய்யுள் முதலியன ஓதுகை; recitation of sacred hymns in the presence of the deity. 3.மனு; petition.

விண்ணப்பித்தல் வி. (v.) பெரியோர்முன் பணிந்தறிவித்தல் ; to suplicate. வித்துதல் வி. (v.) 1. விதைத்தல்; to sow. 2. பிறர் மனத்துப் பதிய வைத்தல்; to impress or imprint on one's mind. 3.பரப்புதல்; to spread, broad cast. வித்துத் தெளித்தல் வி. (v.) விதையைத் தூவுதல்; to scatter seeds, to sow. வித்தெறிதல் வி. (v.) விதை விதைத்தல்; to sow seeds.