பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெ

வெக்கை பெ. (n.) 1. வெப்பம், அனல்; heat. வெக்கையாக உள்ளது'. 2. வெக்கை நோய் பார்க்க. வெக்கை நோய் பெ. (n.) நச்சுயிர் பரவலால் மாடுகளுக்குக் காய்ச் சலையும் கழிச்சலையும் ஏற்படுத்தும், G; rinderpest; cattle plague. வெகு பெ.அ (adj.) மிகவும்; very. காய்கறி விலை வெகு குறைவு'.

வெகு இடை.(int.) I. தன்மையை அல்லது தன்மையின் மிகுதியைக் கூறப் பயன்படும் இடைச்சொல்; particle used in the sense of 'very'. 'குதிரை வெகு விரைவாக ஓடியது. 2. நீண்ட என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; particle used in the sense

வெட்டவெளி

447

அவனது வெகுளித்தனம் பலரையும் கவர்ந்தது'.

வெகுளுதல் வி. (v.) கடுஞ்சினம் கொள் ளுதல்; be enraged. 'குற்றங்களைக் கண்டு வெகுண்டார்'.

வெங்கலம் பெ. (n.) வெண்கலம் பார்க்க. வெங்காய வெடி பெ. (n.) கடினமான பரப்பில் மோதும்படி விசையோடு எறிந்தால் வெடிக்கக் கூடிய, உருண்டை வடிவிலான வெடி; akind of cracker which explodes when dashed against anything hard.

வெங்காரம் பெ. (n.) மருந்தாகப் பயன் படும், இயற்கை வெண்ணிற உப்பு; borax.

of (in space and time) long. 'வெகு வெஞ்சனம் பெ. (n.) காய்கறி, பருப்பு

தொலைவு போக வேண்டும். வெகுசிலர் பெ. (n.) மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள்; very few persons. 'வெகுசிலரே நேர்மை தவறாமல் வாழ நினைக்கிறார்கள்'. வெகுமக்கள் பெ. (n.) பெரும்பாலான மக்கள்; பொதுமக்கள்; public; mass. வெகுசன கருத்து'.

வெகுமதி பெ. (n.) வெகுமானம்,பரிசு; reward. போட்டியில் பதக்கம் வென்றவருக்கு அரசு வெகுமதி யளித்துச் சிறப்புச் செய்தது'.

வெகுமானம் பெ. (n.) பரிசு, வெகுமதி; reward. முயற்சிக்கேற்ற வெகுமானம் கட்டாயம் உண்டு'.

வெகுவாக வி.எ. (adv.) அதிகளவில்,

மிகவும்; very much. புயல் தென் மாவட்டங்களை வெகுவாகப் பாதித்தது'.

வெகுளி பெ. (n.) கள்ளங்கபட மில்லாதவர்; பேதை; frank and innocent person. அவன் ஒரு வெகுளி; யார் எதைச்சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவான்'.

வெகுளித்தனம் பெ. (n.) கள்ளங்கபடமற்ற தன்மை ; the quality of being native.

முதலியவற்றால் செய்யப்படும், உணவுடன் சேர்த்து

உண்ணும்

தொடுகறி;

side-dish of vegetables and dhal. அம்மா வைக்கும் வெஞ்சனம் அருமையாக இருக்கும். இல்லையா?'. வெட்கக்கேடு பெ. (n.) வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை; disgrace; shameful act. 'வெட்கக் கேடான நிலை'.

வெட்கம் பெ.(n.) I. தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு; நாணம் ; shyness; bashfulness. 'மணப் பெண் வெட்கப்பட்டுச் சிரித்தாள்'. 2. அவமானம்; shame; disgrace. 'சிறுவ னிடம் சண்டை போட வெட்கமாக உள்ளது'.

வெட்குதல் வி (v.) அவமானம் அடைதல்;

feel disgraced. ஊழல்வாதிகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்' வெட்டரிவாள் பெ. (n.) மரம், கிளை போன்றவற்றை வெட்டப் பயன் படும், வளைந்த நுனிப்பகுதியை உடைய ஒருவகை அரிவாள்; chopper with a heavy curved blade. வெட்டவெளி பெ. (n.) திறந்தவெளி, மரம், கட்டடம் போன்றவை இல்லாத பரந்த இடம்; open space; plain ground without