பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

வெள்ளிவிழா

பரம் செய்தார்கள்'. வெள்ளிவிழா பெ. (n.) நிறுவனம், கல்வி நிலையம் போன்றவற்றின் இருபத் தைந்தாம் ஆண்டு நிறைவு அல்லது திரைப்படம் போன்றவற்றின் இருபத் தைந்தாம் கிழமை (வாரம்) நிறைவைக் கொண்டாடும் விழா ; silver jubilee (

in the case of a film, arun of twenty-five weeks). வெள்ளையடித்தல் வி (v.) கட்டடம், சுவர் முதலியவற்றுக்குப் பொலிவூட்டும் வகையில், சுண்ணாம்புக் கரைசல் அல்லது வேதியல் (ரசாயன) முறையில் உருவாக்கப்பட்ட வண்ணங்களைப் பூசுதல்; whitewash (a house); paint. 'பொங்கலுக்கு வீட்டிற்கு வெள்ளையடிப்பது வழக்கம்'.

வெள்ளையணு பெ. (n.) குருதியில் விரைவாக நகரக்கூடியதும், நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டது மான வெண்ணிற உயிரணு; white blood cell; white corpuscle.

வெள்ளையும் சள்ளையுமாக வி.அ. (adv.) பளீரென்றிருக்கும், மடிப்புக் கலை யாத வெண்ணிறமாக அணிந்த உடை; spotlessly dressed. அவர் வெள்ளையும் சள்ளையுமாகத் தான் இருப்பார்.

வெள்ளைவெளேரென்று வி.எ. (adv.) மிகவும் வெண்மையாக; brilliant white. 'வெள்ளைவெளேரென்று இருக்கிறது பல்'.

வெள்ளெழுத்து பெ. (n.) எட்டப் பார்வை; long sightedness.

வெள்ளோட்டம் பெ.(n.) 1. நோட்டம் பார்க்குமாறு புதுத்தேர், நாவாய் முதலியவற்றை முதன்முதலாக ஓட்டுதல்; dragging a new temple car, ship, for the first time in trial, trial run. தங்கத்தேர் வெள்ளோட்டம் நடை பெற்றது'. 2. ஒன்றைப் பயன் படுத்துவதற்கு முன் செய்து பார்க்கும் ஆய்வு(சோதனை); preliminary test.

புற்றுநோய்க்கான சில புதிய மருந்துகள் வெள்ளோட்டத்தில் இருக் கின்றன.

வெளிக்குப் போதல் வி. (v.) மலம் கழித்தல்; empty the bowels. குழந்தை வெளிக்குப் போயிருக்கிறது'. வெளிச்சத்துக்கு வருதல் வி (v.) இதுவரை அறியப்படாமலிருந்ததைப் பலரும் அறியும்படி செய்தல்; come to light. ஊழல் செய்வோரின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன'. வெளிச்சந்தை பெ. (n.) அரசின் கட்டுப் பாடின்றி இயங்கும் சந்தை; open market. 'வெளிச்சந்தையில் பொருட் களின் விலை அதிகம்'.

வெளிச்சம் பெ.(n.) 1.ஒளி; light. வெளிச் சத்தில்' கண் கூசியது. 2. பொருள் களின்மீது ஒளிபட்டுத் திரும்புவதால் கண்ணுக்குக் கிடைக்கும் தெளிவு; brightness. 'வெளிச்சமான அறை'. வெளிநடப்பு பெ. (n.) ஓர் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கூட்ட நடவடிக்கைகளில் பங்கேற்காமல் வெளியேறுகை; walk out (in an assembly. சட்டமன்றக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சியினர் வெளி நடப்புச்செய்தனர்'.

வெளிப்படுதல் வி. (v.) I. வெளிவருதல்; emerge. முகில்களுக்கிடையிலிருந்து நிலவு வெளிப்பட்டது. 2. தன்மை, நிலை போன்றவை உணரக்கூடிய வகையில் தோன்றுதல்; to become manifest or evident. 'நகைச்சுவை உணர்வு வெளிப்படப் பேசினார்'. 3. கமுக்கம், மந்தணம், உண்மை போன்றவை பலரும் அறியும் வண்ணம் வெளிப்படையாதல்; become evident; become public; come out. உண்மைவெளிப்பட்டது'. 4. செயல், நிகழ்வு போன்றவற்றின் விளைவாக ஒன்று தோன்றுதல் உருவாதல்; form. அடக்குமுறையின் விளைவாகப் புரட்சி வெளிப்பட்டது. வெளிப்படுத்துதல் வி. (v.) 1. உணர்வு, திறமை, கருத்து முதலியவற்றை வெளிப்படச் செய்தல்; show; express;