பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

reveal. திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு'. 2. உண்மை, மந்தணம், கமுக்கம் (ரகசியம்) போன்றவற்றைப் பலரும் அறியச் செய்தல்; make public. 'ஊழல் செய்வோர் பற்றிய உண்மைகளை விரைவில் வெளிப்படுத்துவேன்'. வெளிப்படை பெ.(n.) I. பிறர் தெளிவாக

அறியக் கூடிய வகையில் இருப்பது; openness; obviousness. செய்யுளின் வெளிப்படைப் பொருள்'. 2. ஒளிவு மறைவில்லாத தன்மை; frankness. வெளிப்படையான பேச்சு பலரை அவருக்கு எதிராக்கியது. 3. நேரடி யாகப் புலனாகும் வகையில் இருப்பது; that which is obvious, direct. காய்ச்சலின் வெளிப்படையான அறிகுறிகள்'.

வெளிப்புறப் படப்பிடிப்பு பெ. (n.) படப்பிடிப்பு நிலையம், கட்டடம், செயற்கையான அரங்குகளில் இல்லாமல், வெளி இடங்களில் நடத்தப்படும் படப்பிடிப்பு; outdoor shooting.

வெளியிடுதல் வி. (v.) 1. அஞ்சல்தலை, திரைப்படம் முதலியவற்றைப்பயன் பாட்டிற்குக் கிடைக்கச் செய்தல்; release (stamps, film, etc). புதிய அஞ்சல்தலையை அரசு வெளி யிட்டது.2. செய்தி, உணர்ச்சி முதலியவற்றைப் பலரும் அறியும் வகையில் வெளிப்படுத்தல்; reveal, publish. 'வியப்பை வெளியிட்டுப் பேசினார். 3. நூல் முதலியவற்றை அச்சிட்டு வெளிக்கொணரல்; bring out; publish. வெளியிட்ட நூல்களெல்லாம் விற்றுவிட்டன'. 4. வெளிவரச் செய்தல்; release; emit. மரங்கள் இரவில் கரிவளியை (கார்பன்டை ஆக்ஸைடு) வெளியிடு கின்றன.

வெளியீடு பெ. (n.) 1. (அச்சடிக்கப்பட்டு அல்லது உருவாக்கப்பட்டுப் பொது மக்களுக்காக) வெளியிடுதல்; (the act of) publishing, release (of book, bonds, film, etc) issue. 'நூல்வெளியீட்டு

வெளுத்துக் கட்டுதல்

451

விழா'. 2. (வெளியிடப்பட்ட நூல் முதலியவற்றின்) படி; copy (of the publication). எங்களிடம் அனைத்துப் பதிப்பகத்தாரின் வெளியீடுகளும் கிடைக்கும்'.3. (எண்ணம், கற்பனை முதலியவற்றின்) வெளிப்பாடு; expression. கருத்து வெளியீட்டுத் திறம் மிக்கவர்களே சிறந்த படைப் பாளியாகிறார்கள்'.

வெளியுலகம் பெ. (n.) 1. ஒருவரைச் சுற்றியிருக்கும் மக்கள்; people (around someone). மாணவர்களின் திற மையை வெளியுலகுக்கு அடை யாளம் காட்டினார்'. 2. உலகநடப்பு; ways of the world. வெளியுலகமே தெரியாதவனாக இருக்கிறாயே'. வெளியூர் பெ. (n.) ஒருவர் குடியிருக்கும் ஊர் அல்லாத பிற ஊர்; place other than one's residence. 'அப்பா வெளியூர் போயிருக்கிறார்'.

வெளிர் பெ.எ. (adj.) (நிறத்தில்) அடர்த்தி குறைந்த; light pale. 'வெளிர் பச்சை; வெளிர் மஞ்சள்'.

வெளிவேடம் பெ. (n.) பிறரை நம்பச்

செய்வதற்காகப் பொய்யாக நடந்து கொள்ளும் செயல்; pretence; deceptive

appearance.

வெளுத்துக் கட்டுதல் வி. (v.) I. பலரும் பாராட்டும் வகையில் அல்லது வியக்கும் வகையில் ஒன்றைச் சிறப்பாகச் செய்தல்; do very well. நடிப்பில் வெளுத்துக் கட்டி விட்டார்.2. வெயில் கடுமையாக அடித்தல்; மழை கடுமையாகப் பெய்தல்; (of sunshine, rain, etc.) be intense or furious. 'இந்தாண்டு மழை வெளுத்துக்கட்டி விட்டது'.

3. கடுமையாகத் திறனாய்வு (விமரிசனம்) செய்தல்; blast (someone or something). 'ஊழலில் சிக்கியவர்க ளைப் பற்றி மாத இதழில் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள். 4. நன்றாக அடித்தல்; beat severly. 'அவருக்குச்