பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 வெளுத்து வாங்குதல்

சினம் வந்தால் வெளுத்துக் கட்டி விடுவார்'.

வெளுத்து வாங்குதல் வி. (v.) வெளுத்துக் கட்டுதல் பார்க்க.

வெற்றி பெ. (n.) I. போர், போட்டி, தேர்தல் முதலியவற்றில் எதிர்ப் பவரைத் தோற்கடித்துப் பெறும் உயர்வு; victory, success. 2. எடுத்த முயற்சியின் பயன்நிறைந்த முடிவு;

successfull

உன்

completion. முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்'. 3. திரைப்படம், நாடகம் போன்றவை நீண்டநாள் நடைபெறும் நிலை; (of films) box

office hit. 'கலைப் படங்களில் ஒருசிலவே வெற்றி பெறுகின்றன'. வெற்றிக் கேடயம் பெ.(n.) போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசாக வழங்கப் படும் கேடயம்; shield.

வெற்றிக்கோப்பை பெ. (n.) போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசாக வழங்கப் படும் கோப்பை; cup. வெற்றிடம் பெ.(n.) I. வெறுமையிடம் (காலியிடம்); vacant space. வெற்றி டத்தில் பூச்செடிகளை வளர்த்தார்'.

2. வெற்றிடம்; vacuum. 'வெற்றி டத்தில் ஒலியலை பரவாது. வெற்றிலை பெ. (n.) I. கொடிவகை; betel creeper plant. 2. பாக்குஞ் சுண்ணாம்பும் சேர்த்து மென்று தின்பதற்குரிய, வெற்றிலைக் கொடியின் இலை; betel leaf. வெற்றிலைச்செல்லம் பெ. (n.) வெற்றிலை, பாக்கு முதலியவற்றைத் தனித்தனி யாக வைத்துக் கொள்வதற்கு ஏற்ற முறையில் சிறுசிறு தடுப்புகள் கொண்டதாகச் செய்யப்படும் மாழைப் (உலோகப்) பெட்டி; a small metal box (for keeping betel leaves. areca nut, etc.,).

வெற்றிலை பாக்கு மாற்றுதல் வி. (v.) வெற்றிலை, பாக்கு, பழம் போன் றவை உள்ள தட்டுகளைப் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும்

ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள் வதன் மூலம் திருமணத்தை உறுதி செய்தல்; conclude a proposal ofmariage (by ceremonially exchanging betel leaves, etc.). பெண் பிடித்திருந்ததால் வெற்றிலை பாக்கு மாற்றி விட்டார்கள். வெற்றிலை பாக்கு வாங்குதல் வி. (v.) கலைஞர்கள் நிகழ்ச்சியை நடத்த ஒப்புக் கொண்டதன் அடையாள மாக, தட்டில் வெற்றிலை, பழம் போன்ற வற்றுடன் முன்பணத்தைப் பெறுதல்; (of performing artists) receive an advance (offered ceremonially with betel leaves, etc,) in acceptance of an engagement. அடுத்தவார நிகழ்ச்சிக்கு வெற்றிலை பாக்கு வாங்கிவிட்டதால் உங்கள் ஊருக்கு வரமுடியாது என்றனர்'. வெற்று பெ.அ. (adj.) 1. எதுவும் இல்லாத, வெறும்; empty; bare; blank. வெற்றுத் தாளில் கையெழுத்துப் போடாதே'. 2. பயனற்ற; வீணான ; useless. வெற்றுப் பேச்சு பேசாதே'. 3. நோக்கம் எதுவும் இல்லாத; purposeless; blank. வெற்றுப் பார்வை'. 4. உடை, கண்ணாடி போன்றவை அணியா; bare; naked.

வெறி பெ. (n.) 1. கண்மூடித்தனமாக அல்லது கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்ளும் நிலை; uncontrolled behaviour. 2. ஒன்றின் மீது கொண்டிருக்கும் முறையான அளவைத் தாண்டிய ஆர்வம் அல்லது ஆசை; fanaticism; craze. 'பதவி வெறிப்பிடித்தவர்'. 3. ஒன்றை அடை வதற்கும் செய்வதற்கும் ஏற்படுகிற அல்லது ஏற்படுத்திக் கொள்ளுகிற வரம்பிழந்த உணர்ச்சி; violent passion. 4.நச்சுயிரிகள் (வைரசு) தாக்குவதால் விலங்குகளுக்கு ஏற்படும் (அவை கடித்தால் மக்களுக்கும் பரவும்) கொடிய நோய்; (of animals) wild and mad behaviour; rabies. 'நாய்க்கடி நோய்'. வெறிச்சென்று வி.அ. (adj.) மக்கள் நடமாட்டம் இல்லாமல்! வெறுமை யாக; wearing a desolate look.