பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

வேகம்2

அவனிடம் இருக்கிறது'. 3. சினம்; ange. அவனைப் பார்த்தாலே எனக்கு வேகம் வருகிறது'.

வேகம்' பெ. (n.) நாற்றம்; (strong) smell; odour. 'தண்ணீரில் மருந்து வேகம் அடிக்கிறது.

வேகாத வெயில் பெ. (n.) உடலை வருத்தும். மிகக் கடுமையான வெயில்; scorching sun; scorching heat. பச்சைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இந்த வேகாத வெயிலில் எங்கே போய்விட்டு வருகிறாய்?'. வேங்கை' பெ. (n.) புலி ; tiger. வேங்கை' பெ. (n.) மஞ்சள் நிறப் பூக்களையும் (மர வேலைக்குப் பயன்படும்) சிவந்த, பருத்த தண்டையும் உடைய ஒருவகை உயரமான மரம்; Indian kino tree. வேட்டி பெ. (n.) (ஆண்கள்) இடுப்பில் சுற்றி அணியும், கணுக்கால்வரை நீளமுள்ள (பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும்) ஆடை; unstitched

garment for men that hangs from waist to ankle; dhoti. எட்டு முழ வேட்டி வேட்டு பெ. (n.) 1.வெடி; cracker; dynamic. 2.(வெடி, துப்பாக்கி முதலியவை) வெடிப்பது; gun shot. எங்கோ துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டது'. வேட்டுவை பெ. (n.) 1. (ஒருவருக்கு) தீங்கு விளைவித்தல்; திட்டம் போட்டுக் கெடுத்தல்; உலைவைத்தல்; do everything to undermine; ruin. அதிகாரியிடம் ஏதோ சொல்லி என் வேலைக்கு வேட்டு வைத்து விட்டான். 2.(எதிர்பாராமல் அல்லது திடீரென்று ஒருவருக்கு) பெரும் செலவு வைத்தல்; put someone to an unexpected heavy expense. தெரியாத்தனமாகப் பொம்மைக் கடைக்குள் நுழைந்துவிட்டேன். என் பையன் இருநூறு ரூபாய்க்கு வேட்டுவைத்துவிட்டான்'. வேட்டை Gu. (n.) I. உணவுக்காகவோ, பொழுதுபோக்

(மனிதன்

குக்காகவோ விலங்குகளையும் பறவைகளையும்) தேடித் துரத்திப் பிடிக்கும் அல்லது கொல்லும் செயல்; (விலங்குகள் தம் இரையை) துரத்திக் கொல்லுவது; hunting, 'புலி வேட்டை தடை செய்யப்பட்டுள்ளது'. 2. தீவிர மாகத் தேடிப் பிடிக்கும் செயல்; operation (against unlawful activities); hunt. 'மாநில அளவில் காவல்துறை யினர் கள்ளச் சாராய வேட்டை நடத்தினர்,'.3.ஒன்றைப் பெறுவதற் காக மிக விரைவாகவும் அதிக அளவிலும் செய்யும் நிலை; drive; campaign. 'வாக்கு வேட்டை'. வேட்டைநாய் பெ. (n.) கூர்மையான மோப்பச் சக்தி உடையதும் காட்டில் வேட்டைக்குச் செல்வதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டதுமான நாய்; hunting dog; hound. வேட்பாளர்

பெ. (n.) தேர்தலில் போட்டியிடுபவர்; candidate (for election to an office). 'இவர் எங்கள் தொகுதி வேட்பாளர். வேட்புமனு பெ. (n.) வேட்பாளர் தன்னைப் பற்றிய தரவல்களை நிரப்பிக் கையெழுத்திட்டு முன் வைப்புத் தொகையுடன் ( தேர்தல் அதிகாரி யிடம்) அளிக்கும் படிவம்; nomination papers. வேட்பு மனுவைத் திரும்பப் பெறநாளை கடைசி நாளாகும்'. வேடிக்கை பெ. (n.) பார்ப்பதற்கு கேட்பதற்குப் புதுமையானதாகவும், விளைவிப்பதாகவும்

சிரிப்பை

fun;

amusement.

அமைவது; வேடிக்கையாகச் சொன்னதைத் தவறாக எடுத்துக்கொண்டாய்'. வேடிக்கை காட்டு வி. (v.) (குழந்தைகள். சிறுவர்கள் போன்றோருக்கு) வேடிக்கை தரும் முறையிலான செயல்களைச் செய்துகாட்டுதல்; வேடிக்கை பார்க்கச் செய்தல்; entertain; amuse. 'நாடகத்தில் இடை யிடையே கோமாளி ஒருவன் வேடிக்கை காட்டி எல்லோரையும் சிரிக்க வைத்தான்'.