பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேடிக்கை பார் வி. (v) I. (தன்னைச்சுற்றி நிகழ்வதை அல்லது இருப்பதை) பொழுதுபோக்கும் வகையிலோ ஈடுபாட்டுடனோ பார்த்துக் கொண் டிருத்தல்; watch aimlessly. வேலையைப் பார்க்காமல் அங்கே என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?'. 2. (பிறர் மோசமாக நடத்தப்படும்போது அல்லது தவறு, ஊழல் போன்றவை நடக்கும்போது) தேவையானது எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருத்தல்; be a silent witness. அன்றைக்கு அவன் என்னை அடிக்கும்போது நீ வேடிக்கை பார்த்துக்கொண்டுதானே

இருந்தாய்?.

வேடுகட்டு பெ. (n.) (பானை, குடம், கூடை போன்றவற்றை) துணியால் மூடிக் கட்டுதல்; cover (a pot. vessel. basket. etc.) with a cloth. தயிர்ப் பானை இறுக்கமாக வேடு

மிகவும்

கட்டப்பட்டிருந்தது'. வேண்டப்பட்ட பெ.அ. (adj.) உறவு, நட்பு, பழக்கம் போன்ற முறையில் தெருக்க மாக உள்ள; someone very close. அவள் நமக்கு வேண்டப்பட்ட பெண். வேண்டாவெறுப்பாக வி.அ. (adv.) செய்ய வேண்டி இருக்கிறதே என்ற வெறுப்போடு; விருப்பமில்லாமல்; reluctantly; unwillingly. 'மாமாவிடம் பணம் கேட்டேன். வேண்டா வெறுப்பாகக் கொடுத்தார். வேண்டு' வி. (v.) 1. பணிவுடனும் நயமாகவும் ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளுதல்; ask politely; entreat. 'நண்பர் தன் வீட்டில் உணவு உண்ணுமாறு என்னை வேண்டினார். 2.(நன்மை உண்டாகுமாறு அல்லது குறிப்பிட்ட ஒன்றைத் தருமாறு இறைவனிடம்) இறைஞ்சுதல்; pray to. ஆண்டவனை வேண்டிக்கொள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்'. வேண்டுகோள் பெ. (n.) ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்

வேளாண்மை

455

கொள்ளுமாறு நயந்து அல்லது பணிவாகக் கேட்டல்; கனிவாகக் கேட்டுக்கொள்ளுதல்; request; appeal. இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள்'.

வேண்டுதல் பெ. (n.) வழிபடல்; நேர்ந்துகொள்ளுதல்; vow made to a particular deity. வேண்டுமென்றே வி.அ. (adv.) (ஒன்றைச் செய்யும்போது) தற்செயலாகவோ தவறுதலாகவோ இல்லாமல் தெரிந்தே; intentionallly; consciously; deliberately. வேண்டுமென்றே யாராவது இப்படிச்செய்வார்களா?' வேந்தர் பெ. (n.) பல்கலைக்கழகத்தின் கௌரவத் தலைவர்; chancellor (of a university).

வேலை வாய்ப்பகம் பெ. (n.) வேலை தேடுவோரின் பெயரையும் கல்வித் தகுதியையும் பதிவு செய்துகொண்டு. வேலை வாய்ப்பைத் தெரிவிக்கும் பணியைச் செய்யும் அரசு அலுவலகம்; government office which maintains a register for those seeking employment; (in India) employment exchange. வேலை வாய்ப்பு பெ. (n.) தொழிற்சாலை, அலுவலகம் போன்றவற்றில்) முறை யாக வேலைக்கு அமர்த்தப்படும் வாய்ப்பு; employment. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு இலக்கம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. வேலைவெட்டி பெ. (n.) (ஒருவர்) செய்ய

வேண்டியதாக இருக்கும் ஏதேனும் ஒரு வேலை; any work. 'வீட்டிற்குப் போய் ஏதாவது வேலைவெட்டி இருந்தால் அதைப் பார்' . 2. வேலை; தொழில்;job; occupation. வேள்வி பெ. (n.) 1. யாகம்; sacrifice. ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதக் கடைசியில் வேள்வி நடக்கும்'. வேளாண்மை பெ. (n.) I. பயிர்த்தொழில்;

agriculture.