பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்தும் இக்காலத் தலைமுறையினருக்குத் தமிழ்ச் சொற்கள் பலவற்றையும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத நிலையில் இந்த நடைமுறைத் தமிழ் அகரமுதலி மிகவும் பயனுடையதாக இருக்கும். இந்த அகரமுதலியைக் கொண்டு நல்ல தமிழ்ச்சொற்களையே இளைஞர்கள் பயன்படுத்தத் தொடங்குவர் என்ற நோக்கத்தில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் நடைமுறைத் தமிழ் அகரமுதலியை வெளிக் கொணர்ந்துள்ளது. இந்த இயக்ககத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளித்து வரும் மாண்புமிக தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கியுள்ள மாண்புமிகு தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு (ம) தொல்லியல்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களுக்கும், இயக்ககச் செயற்பாடுகளுக்குக் கருத்துரை கூறி எப்போதும் ஊக்கமளித்துவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் திரு. மகேசன் காசிராசன் அவர்களுக்கும், இந்த அகராதியைச் சிறப்பாக உருவாக்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மேனாள் இயக்குநர் திரு. த. காமராசு அவர்களுக்கும், இயக்ககப் பதிப்பாசிரியர்கள் முனைவர் மா. பூங்குன்றன், திரு. சு. வீரவேலு, முனைவர் தி.பாலசுப்பிரமணியன், திரு. கி. தமிழ்மணி, மேனாள் பதிப்பாசிரியர்கள் முனைவர் மு. கண்ணன், முனைவர் மு. கோமதிவள்ளியம்மை, உதவிப் பதிப்பாசிரியர் திரு. ஏ. காந்தி, தொகுப்பாளர்கள் திரு. வே. பிரபு, திரு. கி. இராமர், திருமதி ஜெ. சாந்தி, முனைவர் வே. கார்த்திக், திருமதி கு. சங்கீதா, கணிப்பொறியாளர்கள் திருமதி க. கஸ்தூரி, திரு. ப. தீபக், மேனாள் கண்காணிப்பாளர் திரு. ஆ.சுந்தரவரதன், ஓவியர் சா.கி.கணேசன், கண்காணிப்பாளர் திருமதி ஆ.மு.பிந்து (ம) நிருவாகப் பணியாளர்கள் பா.சரண்யா, நா.பாலகிருஷ்ணன், வெ.சுதாகர், சீ.ஸ்ரீகாந்த், து. ரஜினிகாந்த், இரா.கற்பகம், ஆ.குணசுந்தரி உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (கோ. விசயராகவன்)