பக்கம்:நந்திவர்மன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 26

இடம் : காஞ்சி அரசவை. காலம் : முற்பகல்.

(காவலர், குடிமக்கள், அறிஞர்கள், குழுமி இருக்கின்றனர். க ட் டி ய ம் கூறப்படுகிறது. முறைப்படி மாமன் னன் ந ந் தி வ | ம ன் சபை க்கு வருகிருன்..!

கட்டியக்காரன் : ராஜாதி ராஜ ராஜ விக்ரம, அவனி நாரண, பல்லவர் கோளரி, பரதுர்க்கமர்த்தன, கம்பீர கழற்சிங்க தனிச்செங்கோல்பாய, வீர புரந்தர நந்திவர்ம மகாராஜா பராக் பராக் பராக் !

(எல்லோரும் எழுந்து நின்று அமருகின்றனர்.}

பெருங்தேவனர் : (எழுந்து) மாமன்னன் வாழ்க! வீரத் தமிழ்க்கோ மறவன் வாழ்க 1 பகை வென்ற சக்கர

வர்த்தி வாழ்க !

!பாடுகிறார் விருத்தம்}

வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால் உண்மையால் பாராள் உரிமையால்-திண்மையால் தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றாணுேடு ஆர் வேந்தர் ஏற்பார் எதிர் ?

எல்லோரும் : ஆஃகா ஆஃகா ! பெருங் கொற்றவன் வாழ்க! செங்கோல் வாழ்க!

எல்லோரும் : வாழ்க! வாழ்க!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/106&oldid=671864" இலிருந்து மீள்விக்கப்பட்டது