பக்கம்:நந்திவர்மன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

கிட்டே பரிசு வாங்கணுமாம்! தங்கறத்துக்கு நம்பிக்கையா ஒரு இடம் கேட்டாரு, ஒங்ககிட்டே கூட்டி வந்தேன்!

வித்தி : என் வீடு என்ன தங்குமடமா?

பச்சை :- இது வேறு தினுசான மடந்தான் ! இருந்தாலும் நீ ஒரு கலைஞ ! இவர் ஒரு கலைஞர்: பொருத்தம் இருக்குது பாரு (முல்லையிடம்) ஏண்டி யம்மா! நீயுந்தான் கொஞ்சம் சொல்லேன் !

முல்லை :- வித்தியாவதி ! உனக்கோ ஒவியம் பழக ணும்னு தீராத விருப்பம்! இவரோ ஒவியர். நாம் தங்க இடம் கொடுத்தா இவரு ஓவியம் கத்துக் கொடுக்குருரு. பார்த்தா நல்லவராத்தானே தெரியுது !

மைத்தி - ஆமாம் தாயே! நான் தூய்மையான கலைஞன் வித்தியாசமாக நினைக்காதே! பெற்ற தந்தை போல், உற்ற குருவைப்போல் நடந்து கொள்வேன் ! உன்னை ஒவியக்கலையில் மகா நிபுணியாக்குவேன் !

வித்தி :- நல்லது ஐயா! தங்குங்கள். ஆனல் தகுதிக்குறைவான செயல்கள் இங்கு கூடாது ! நான் பிறவியில் தாசி என்றாலும் நடத்தையில் தோஷியல்ல ! குடும்பப் பெண் !

(சந்திரவர்மன் படத்தைப் பார்த்து விட்ட பச்சை}

பச்சை :- அடாடாடா! எங்க சந்திரவர்ம மகா ராஜா. தோ இங்கே இருக்காரே !

[அருகே சென்று பார்க்கிருன் திரும்பி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/27&oldid=671976" இலிருந்து மீள்விக்கப்பட்டது