பக்கம்:நந்திவர்மன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

பச்சை :- ஏன் பார்க்கலே ?

வித்தி :- இன்னும் காலம் வரலே !

மைத் : காலம் வந்து விட்டது வித் தியாவதி! இதோ நான் வந்திருக்றேன் ! உனக்கு ஒவியம் கற்றுத் தருவது மட்டுமல்ல ; நீ மனதில் வைத்து உருகும் காதலனைப் பெற்றுத் தரவும் என்னுல் முடியும் !

பச்சை :- அது முடியாது. சத்திரவர்மர் ஏந் தலைவர் ஏஞ்சொற்படித்தான் நடப்பாரு. நான் மனசு வச்சாத்தான் முடியும்!

மைத் : (சாகசமாக) பச்சை! நீதான் எனக்கு எல்லா வகையான உதவிகளும் செய்வதாகச் செப்பி விட்டாயே! நீ மறப்பாயா? நான் தான் மறப்பேனு? இதோ......

|பையை எடுத்து பொற்காசுகளைக்

கொடுக்கிருன்)

பச்சை : (மகிழ்ந்து) பலே! பலே! அறிமுகத் துக்கே அஞ்சு பொன் ! அப்புறம் எத்தனை பொன்..... ஐயா! நீங்க சொல்றதெல்லாத்தையும் நாஞ் செய்யறேன்! இப்பவே செய்யறேன்! என்ன வேணும் சொல்லுங்க?

மைத் :- எப்படியாவது சந்திரவர்மனை இங்கே அழைத்து வரவேண்டும்!

பச்சை : இதோ, ஒரு நொடியிலே வந்திட்டேன் !

(போகிருன். மைத்ரேயன் மூட்டை களை வைக்கிறார்.}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/29&oldid=671978" இலிருந்து மீள்விக்கப்பட்டது