பக்கம்:நந்திவர்மன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

சக்தி - வயிரத்தின் தகுதி, அதனை வைத்திருப் பவர்க்கல்லவோ தெரியும் வித்யாவதி 1 அரசகுடும்பத் திலே பிறந்தும் அரியாசனம் கிட்டாதவன். நல்ல தமி ழறிந்தும் நாடோடியாகச் சுற்றுபவன். நான் கற்று மறந்த கல்வியை உன் காதலின் பேரொளி பெற்றுத் தந்ததடி எனக்கு !

வித்தி - அப்படி என்னிடம் என்ன சுவாமி இருக் கிறது ?

சக்தி : மனிதன் விரும்புகின்ற கலையின்பம் அத் தனையும் மண்டிக் கிடக்கிறதே. இந்தத் தங்கத் திரு மேனியில் !

வித்தி : உண்மைதானு சுவாமி ?

சக்தி :- காற்று வீசுவதும், கதிரவன் காய்வதும்

உண்மைதானே !

வித்தி :- (அனைத்து, அவன் உதடுகளைக் கிள்ளி) இந்தச் சுவையான இன்பம் போல, அவை நிலையான உண்மையாயிற்றே !

சந்தி :- ஒப்புக்கொள்ள வேண்டும் அப்படி. இது

தான் நாணயம். (அணைத்தல்)

{கையிலே ஒவியத்தோடு, பின்புறம் வந்து நிற்கிருன் மைத்ரேயன்)

மைத் : கொஞ்சம் திரும்ப வேண்டும் இப்படி. இதுதான் ஒவியம் !

சந்தி: (விலகி ஒ1 ைமத்ரே ய ரா! வாரும், முடித்து விட்டீரா ஒவியத்தை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/41&oldid=671992" இலிருந்து மீள்விக்கப்பட்டது