பக்கம்:நந்திவர்மன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 10.

இடம் : அந்தப்புரம்,

காலம் : பிற்பகல்.

(மன்னன் நந்திவர்மனும், மகா ராணி சங்கா தேவியும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.}

கந்தி - (காய் நகர்த்தி) இதோ வெட்டு வெட்டி விட்டேன். இனி என்ன செய்ய முடியும் உன்னுல்?

சங்கா : அப்படியா கூறுகின்றீர்கள்......பார்ப் போம். (காய் நகர்த்தி) இதோ கட்டிவிட்டேன், மன்ன வரே ! உங்கள் படை வீரர்களால் இனி ஒரு அடியும் நகர முடியாது ! வெற்றி எனக்கு!

கந்தி : (அதனை பார்த்து) ஆம், நான் தோற். றேன்! சங்கா ! நான் தோற்றேன் ! (அவள் கைகளைப் பற்றி எழுந்து) நீ பல கலையும் கற்ற கலையரசி மட்டு மல்ல, அரசியல் அறிவு பெற்ற ஞானத் தமிழரசி ! சதுரங்கத்திலே பகைவனின் படையைக் கட்டி வெல்வது ஆட்சித் துறையிலே அறிவு கொண்டு பகைமை வெல் லும் திறமைக்கு அடையாளம் சங்கா மங்காத மாணிக் கமே! பல்லவர் பெருங்குடிக்கு நீயொரு அணையாத மண்ணி விளக்கு !

[அன்போடு அணைக்கிருன்..!

சங்கா :- (மார்பில் சாய்ந்து) விளக்கு நான் : ஒளி நீங்கள், தென்றல் நான் ; குளிர்ச்சி நீங்கள், கண்ணு

4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/51&oldid=672003" இலிருந்து மீள்விக்கப்பட்டது