பக்கம்:நந்திவர்மன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

படவேண்டியவன்! இதற்கு நீ உடன்பட்டேயாக வேண்டும் ! -

வித்யா : ஒருக்காலும் முடியரது !

மைத் :- வெண்ணை திரளும் போது தாழியை உடைக்கதே! என் விருப்பம்போல் நடந்தால், நீ அரண்மனை நாட்டியக்காரி அந்தஸ்தில் உயர்வு பரிசு கொஞ்சமல்ல பத்தாயிாம் பொற்காசுகள் !

வித்யா. து உன் பொற்காசு, என் கால் தூசு ! என் காதலருக்கும் துளியளவும் துரோகம் செய்ய மாட்டேன் !

மைத் :- காதலர்! நானில்லாமல் எங்கேயடி வந்து விட்டார் காதலர் ? உங்களைச் சேர்த்து வைத்தவன், பஞ்சு மெத்தையிலே கொஞ்சிச் குலாவிட வாய்ப்பளித் தவன் நான் ! என் விருப்பத்தையா மறுக்கிறாய்?

வித்யா - மறுப்பது மட்டுமல்ல, உம்மை அடியோடு வெறுக்கிறேன் ;

மைத் : பல்லாண்டு முயற்சியிலே கட்டி முடித்த ர்க் பு:வி கே! விட் ப் ெ g |7 * . -- - ** கோட்டையடி, பாவி தகர்த்துவிடாதே தவிட்டுப் பொடி யாகி விடுவாய் ! பறந்துவிடும் பவிஷெல்லாம்!

வித்யா :- நான் கொலையுண்டாலும் சரி கொலைக் காரியாக மாட்டேன் !

மைத் :- (தணிந்து) வித்யாவதி எண்ணிப்பார்

சற்று எனக்காகச் செய். நல்ல சந்தர்ப்பம். சந்திர வர்மனக் கொலை செய்ய வேண்டாம். சிறிதுநாள் உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/80&oldid=672035" இலிருந்து மீள்விக்கப்பட்டது