பக்கம்:நந்திவர்மன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

சக்தி ;- (அஞ்சி) ஆ! என்ன ?..... எ ன் ன?..... எனக்கொன்றுமே தெரியாதே! ஏதோ எங்கனமோ

நடத்திருக்கிறது!

சீலா : கள்ளனுக்குள் குள்ளன் பாய்ந்தான்; குள் என் ஒழிந்துவிட்டான் ! கள்ளன் கலங்குகின்றான் அகப் பட்டுக்கொண்டு !

சந்: அமைச்சரே! எரியும் தீயில் எண்ணை வார்க் காதீர்! எனக்கும் பேசத்தெரியும் !

சங் : அது எனக்கு நன்றாகத் தெரியுமே ! ஆணுல், விவாதம் புரிய நேரமில்லை மைத்துனரே ! மைத்ரேயன் சதிக்கு உம்மிடமே மரணதண்டனை பெற்றுவிட்டான். உமது சதிக்கு நான் சிறைத்தண்டனை அளிக்கிறேன் உமக்கு. மன்னவர் வந்தபிறகு செய்வதைச் செய்யட்டும்! யாரங்கே?

வீரர் இருவர் : (வந்து வணங்கி) மகாராணி !

சங்கா : இவரைச் சிறையிலே வையுங்கள் !

வீரர்கள் : உத்திரவு.

|தலைகவிழ்ந்து நிற்கும் சந்திரவர்மனை இழுத்துச் செல்கின்றனர்)

சங் அமைச்சரே ! இந்த இரு சதி ஒலைகளோடு..., சீலா : இப்பொழுதே மன்னருக்குச் செய்தியனுப்பு

கிறேன் மகாராணி !

(ஒலையைத் தர அமைச்சர் வாங்குகிறார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/88&oldid=672043" இலிருந்து மீள்விக்கப்பட்டது