பக்கம்:நந்திவர்மன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

(ஒடிச்சென்று அறுவாமனையொன்றை எடுத்துவந்து தலைக்குமேல் ஓங்கு கிருன் வளைந்த அதன் முனை அவன் தலையின் பின்புறத்தைத் தாக்குகிறது. “ஐயோ அம்மா!’ என்று அப்படியே உட்காருகிருன். சிரிக்கிருள் முல்லை. அப்போது அவள் தாய்க்கிழவியின் குரல் கேட் கிறது.)

தடிப்பயல் மடையன் காசுக்குச் பயனில்லாத காலாடி ! இதங்கெட்டவன் ! எச்சல் பொறுக்கி! நன்றி கெட்ட நாய் !

(தாய்க்கிழவி வருகிருள். தன்னையே பேசுவதாக பச்சை விழிக்கிருன்..!

முல்லை : அம்மா! யாரது? நீ என்ன சொல்றே?

தாய் : அந்தப் பய அரமனையிலே வேலை பார்க் கிருனே எதிர்த்த வீட்டு யாழ்ப்பாணன் ஆபத்தான சங்கதின்னு ஒடோடியும் வந்து சொல்லவேணும் தடியன்: திங்கறதுன்கு மட்டும் வந்திடுருனே !

முல்லை : அரமனையிலே யாருக்கு? என்னமமா ஆபத்து?

தாய் : அடி மகளே ! சந்திரவர்ம ராசா என்னமோ பண்ணினுருன்னு மகாராணி சிறையிலே அடைச்சிட் டாங்களாமே !

முல்லை : என்னம்மா அநியாயம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/91&oldid=672047" இலிருந்து மீள்விக்கப்பட்டது