பக்கம்:நந்திவர்மன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 22.

இடம் :- குறுக்கோட்டை அரண்மனை

(வெற்றியடைந்த த த் தி வர்மன் வீற்றிருக்க, முன்னுல் நிறுத்தப்பட் டுள்ளான் கண்டுண்ட பங்கையன், விக்கிரம கேசரி, மற்றும் வீரர்கள்

கந்தி : பரம்பரைப் பகைமைக்காகப் போர் முறுக்கிய பங்கைய மன்னு! இப்போது நீ எனது அடிமை திறை செலுத்த மறுத்ததோடு திறை கேட்கவும் துணிந்தவன் உயிர்ப்பிச்சை வேண்டி நிற்கின்றாய் என் முன்னுல் : பரிதாபத்திற்குரிய உனது நிலையை உணர்கிருயா ? இல்லையா?.... மேலைச் சாளுக்கியத்திலிருந்து மேலால் உதவி கிடைக்கும், பார்த்துக் கொள்ளலாம் நந்திப் பல்லவனே, என்று கருதுகின்றாயா?

பங் : அந்த எண்ணம் அணுவும் எனக்கில்லை, மன்னர் பெரும தங்கள் பெருமையும், பேராண்மையும் உணராது தவறு செய்து விட்டேன், மன்னிக்க வேண் டும்! எனது நாடாளும் உரிமையை எனக்கே தந்தருள வேண்டும்! நந்திக் கொடியின் கீழே பன்றிக்கொடி பறக்க, நன்றி மறவாது கப்பம் செலுத்தி நல்லாட்சி நடத்துவேன். கருணை செம்யுங்கள் !

கந்தி : (சிறிது யோசித்து) நன்று, நான் கூறுகின்ற நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளுவீரா? பங் : ஒப்புக் கொள்ளுகின்றேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/94&oldid=672050" இலிருந்து மீள்விக்கப்பட்டது