பக்கம்:நனவோட்டங்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ரா. சீனிவாசன் எனக்கு அது தருக்கமாகவேபடுகிறது. தர்க்கம் குதர்க்கம் என்பது எல்லாம் அவரவர் மன நிலையைப் பொறுத்த விஷயம்தானே. ஏன் இப்படி மாறுபட வேண்டும் என்று கேட்கலாம். ஏன் மாறுபடக் கூடாது என்று திருப்பிக் கேட்கத் தோன்று கிறது. வாழ்க்கையில் ஒரு சில பழக்கமான சிந்தனைகள் ஏற்பட்டு விடுகின்றன. இது நியாயம் என்றுதான் சொல்ல லாம். ஆது நியாயமாக இருந்தால் ஏன் இந்த உலகத்தில் இவ்வளவு துன்பம்? இவ்வளவு கவலை? வாழ முடியாமல் மனிதல்-சிக்கித் தவிக்கிறான். அவள் சொன்னாள் "எங்களுக்கு எல்லாம் இருக்கிறது. எங்கள் வீட்டிலே என்ன குறை : ஒரு மாதத்துக்கு முன்னாலே டெலிவிஷன் கூட வாங்கி வைத்திருக்கிறோம். எல்லா வசதிகளும் இருந்தாலும் ஒரு திணறல் இருக்கத்தான் செய்கிறது." "டெலிவிஷன் என்றதும் எனக்கு ஒரு நினைவு வருகிறது. இந்தத் தொலைக்காட்சிக் கருவி வாங்குவதற்கு பாங்கி கடன் தருகிறார்களாம்; அதை நம்பி சாதாரண வருவாயுள்ளவர்களும் துணிந்து வாங்கி விடுகிறார்கள். அப்புறம் பற்றாக்குறை. இப்பொழுது எல்லோரும் எதையும் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பொதுவாக ஒரு வசதியான வீடு என்றால் புதிய சேர்க்கை டெலிவிஷன் தான். எல்லாரும் பெட்டியில் அடங்கிய பணம்போல அடக்கமாக உட்கார்ந்து கொண்டு கேட்கிறார்கள். அதைவிட எனக்கு நிரம்ப பிடித்து இருந்தது அந்த ஏழைகள் வாழும் பகுதிதான், அங்கே வீட்டிலே விளக்கு இல்லை. இருள்தான். ஆனால் அது அவர்களுக்கு ஓய்வைத் தருகிறது. பத்து வீட்டுக்கு ஒரு டிரான்சிஸ்ட்டர் பாடிக் கொண்டு இருந்தது. சினிமாப்பாட்டை ரசித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/10&oldid=772783" இலிருந்து மீள்விக்கப்பட்டது