பக்கம்:நனவோட்டங்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 : ரா. சீனிவாசன் "இல்லை. அந்தக் குடும்பத்துக்காகச் செலவை மிச்சப் படுத்துகிறேன்" என்று சொன்னார். "நான் வாங்கித் தருகிறேன்" என்று சொன்னேன். அவர் 'பிகு பண்ணிக் கொள்ளவில்லை. உடனே என்னோடு கலந்து கொண்டார். அவர் சொன்னார் "இந்த டீ இருக்கிறதே இதுதான் இந்தக் குடிசை வாசிகளுக்கு அவசியமான குடி ஒவ்வொரு தொழிலாளியும் இதில்தான் சுவர்க்கத்தையே காண்கிறான்" என்று கூறினார். பிறகு மன்றத்துக்குள் போனோம். அதுவும் ஒலைக்குடிசைதான். மிகவும் குளிர்ச்சியாய் இருந்தது. பெரிய பிரமுகர்கள் வீட்டில் பங்களாக்களின் முன்னால் தனிக்குடிசை போட்டு வருகிறவர்களை வரவேற்றுப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அதாவது அவரது சோஷியலிசம் அது. வருகின்றவர்கள் அநாவசியமாக அவர்கள் பணத்திற்காக அவர்களை வெறுக்காமல் இருப்பதற்கு என்று நினைக்கிறேன். பெரிய ஹோட்டல் களில் தனிக்கட்டிடங்களைக் குடிசைகள் (cottage) என்று அழைப்பதைப்பார்த்து இருக்கிறேன். குடிசைகளுக்குத் தனிமதிப்பு இருப்பதை உணர்கிறேன். அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். மேல் மாடிகளில் இன்பம் இல்லை என்பதை எளிமையில்தான் அழகு இருக்கிறது. உள்ளே இந்திராகாந்தி படம் மாட்டப்பட்டு இருந்தது. அது என் கைப்பட எழுதியது என்று கூறினார். அந்த அம்மாளுக்கு ஒரு பக்கம் நரை தனியழகைத் தந்தது. "பதவியில் இறங்கிவிட்டார்களே அவர்களுக்கு ஒரு படமா?" என்று கேட்டேன். "இது ஒரு படிப்பினை. ஆட்சியில் இருப்பவர் நிரந்தரமாக இருக்க முடியாது. மக்கள் வாக்குரிமை வலிமை மிக்கது" என்று கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/100&oldid=772785" இலிருந்து மீள்விக்கப்பட்டது