பக்கம்:நனவோட்டங்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ( ரா. சீனிவாசன் "எல்லோரும் ஒர் குலம் எல்லோரும் ஒர் நிறை எல்லோரும் இந்நாட்டுக் குடிமக்கள்" என்று அழகாக எழுதி வைத்திருந்தார். மன்னர் என்பதை மாற்றி மக்கள் என்று எழுதியது வியப்பாக இருந்தது. அவர் மக்களை ஏமாற்ற விரும்ப வில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். "பிறப்பு ஒக்கும் எல்லா உயிரும்" இது திருக்குறள். இதுவும் அங்கே இடம் பெற்றிருந்தது. "தனி ஒருவனுக்குத் தொழில் இல்லை என்றால் ஆட்சியினை மாற்றி விடுவோம்" என்று எழுதித் தீட்டி இருந்தார். பாரதியைவிட ஒரு படி முன்னேறிவிட்டார். என்பதைத் தெரிந்துகொண்டேன். உணவு இடுவது பழங்காலத்துக் கோட்பாடு; தொழில் தருவது இக்காலத்துக் கோட்பாடு. உணவு இருக்கிறது. எப்படியாவது சாப்பிடுவது ஒரு வாழ்வு ஆகாது. உழைத்து உண்ணவேண்டும்; அதற்குத் தொழில் வேண்டும் என்பது அவர் கோட்பாடு. எனக்கு ஏதோ ஆரம்பப் பள்ளிக்கூடத்தைப் பார்ப்பது போல இருந்தது. அங்கேதான் இப்படி அட்டைகளில் நிறைய எழுதி மாட்டிவைத்திருப்பதைப் பார்த்து இருக்கிறேன். சின்ன வயசில் என்னைத் திருக்குறள் ஒப்புவிக்க வற்புறுத்தினார் ஆசிரியர். அது என்னால் முடியவில்லை. ஒரு அச்சுப் புத்தகம் செய்யும் வேலையை மனிதன் ஏன் செய்யவேண்டும்; ஒப்பிப்பது என்பது அதுபோலத்தான் என்று நினைத்தது உண்டு. ஒருவேளை இவர் முதியோர் கல்வி நடத்துகிறார் போலும் என்று நினைத்தேன். "முதியோர் கல்வி ஏதாவது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/102&oldid=772788" இலிருந்து மீள்விக்கப்பட்டது