பக்கம்:நனவோட்டங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 101 "நல்ல முயற்சிதான் இதனால் எல்லாம் பெரிய நன்மைகள் உண்டாகிவிடுமா?" என்று கேட்டார். "அரசியல் பள்ளி நடத்தவேண்டும். அதைப்பற்றி நாங்கள் விவாதம் நடத்துவோம். எங்களுக்குத் தெரிந்த அளவில் பத்திரிகைச் செய்திகளை வைத்துக்கொண்டு விவாதம் நடத்துவோம்" என்று விளக்கினார். "அப்பொழுது இது ஒரு சட்டசபை ஆகிவிடாதா?” "மேலேயே பார்த்துக்கொண்டிருந்தால் போதாது கீழேயும் கடைக்கால் போட்டால்தான் கட்டடங்கள் கட்ட முடியும்?" என்றார். "எந்தச் சீர்திருத்தமும் மேலே இருந்து வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது இந்தப் பிறவியில் காண முடியாது.” என்று கூறினார். "சீர் திருத்தம்” என்ற சொல் அவ்வளவாக என்ன்னக் கவரவில்லை. - "மறுபடியும் நீங்களும் இப்படித்தானே பேசுகிறீர்கள். நீங்கள் இங்கே காட்டிய இவ்வளவு துன்பங்களை எப்படி மாற்ற முடியும்?” என்று கேட்டேன். | அவர் சொல்ல ஆரம்பித்தார். சீர்திருத்தம் வேறு சீர் அமைப்பு வேறு. அடிப்படை மாற்றங்கள் வேறு. ஒரு சிலவற்றைச் சீர்திருத்தம் என்று கூறலாம்; தீண்டாமை ஒழிப்பு சீர்திருத்தம்; இந்தக் குடிசைகளை மாற்றி வாரியம் கட்டித் தரும் வீட்டமைப்பு சீரமைப்பு: நில உச்சவரம்பு, சொத்து உச்சவரம்பு, நிறுவனங்களைத் தேசிய மாக்குதல் இவை எல்லாம் அடிப்படை மாற்றங்கள் என்று விளக்கினார். இந்த விளங்கம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை இந்த முதலிரண்டுகளில்தான் அரசாங்கம் அடி எடுத்துவைத்திருக்கின்றது. அதைத்தான் மக்களுக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/103&oldid=772790" இலிருந்து மீள்விக்கப்பட்டது