பக்கம்:நனவோட்டங்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ரா. சீனிவாசன் செய்யும் நன்மையாகக் கருதி வருகிறது. அதிலே சேர்ந்ததுதான் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம், மது ஒழிப்புத் திட்டங்கள், முதியோர் கல்வி, சமூக சேவை முதலியன என்று மேலும் விளக்கம் தந்தார். பொருளாதார வகுப்பில் எப்பொழுதோ படித்தேன். அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அவை பிரிட்டிஷார் எழுதிய நூல்களைப் படித்து எழுதிய பாடங்கள் என்று அறிந்தேன். "அப்பொழுது அரசாங்கம்” "இந்த இரண்டைத்தான் செய்து கொண்டிருக் கின்றன. இப்படிச் செய்தால் மக்கள் முழு திருப்தி அடைவார்கள் என்று நினைக்கிறார்கள். இவை இந்த முதல் லட்சியங்களைத் தான் தொடும். சம உரிமை, சம அந்தஸ்து; மூன்றாவதற்கு வரமுடியாது” என்றார். "அது கூட கானல் நீர் என்றுபடுகிறது. அதை விடச் சம உடைமைதான் அவசியம்” என்றேன். "அவசரப்படக் கூடாது; இந்த இரண்டில்தான் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். மூன்றாவது இனிமேல் தர்ன் செய்ய வேண்டும்." "எப்பொழுது செய்வார்கள் என்று நினைக்கிறீக்கள்?" "மக்கள் இதை உணரும் போது, அவர்களுக்கு இதை எடுத்துக் கூறும்பொழுது.” "யார் இதை எடுத்துச் சொல்வது?" "அதுதான் நாட்டில் நடக்கும் அமைதியின்மை, கிளர்ச்சிகள், அடிதடிகள், அதற்காகத் தான் நாட்டில் பல பேர் தியாகம் செய்ய வேண்டிவரும்" என்றார். என்ன இவரே கிளர்ச்சிகளுக்குத் தலைமை தாங்குவார் போல் இருக்கிறதே என்று நினைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/104&oldid=772794" இலிருந்து மீள்விக்கப்பட்டது