பக்கம்:நனவோட்டங்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் ) 105 எப்படியோ இந்த அழகான பழமொழி உண்டாகி இருக்கிறது. 'இன்று கண்ணம்மாதான் சமையல்"என்று சொன்னார். ஆறு நாட்களில் இவர் சமையல், ஏழாவது நாளில் அவள் சமையல். நல்ல திட்டம் என்று எண்ணிக் கொண்டேன். = - அவரோடு அவர் குடிசைக்குச் சென்றேன். வெளியே மாட்ட முடியாத பல படங்கள் அவர் குடிசையில் மாட்டப்பட்டிருந்தன. அச்சு ஏறாத ஏட்டுப் பிரதிகளைப் பார்ப்பது போல இருந்தது எனக்கு அவை. ஒரு தொழிலாளியைப் போலீசார் தடி கொண்டு அடிப்பது போல ஒரு படம் வரைந்திருந்தார். அதற்குக் கீழே போராட்டம் என்று அழகு தமிழில் எழுதி இருந்தார். இங்கேயும் போராட்டம்தானா?” என்ற எண்ணம் உண்டாயிற்று. - 'இவள்தான் மூத்த பெண்” என்று அங்கே விளையாடிக் கொண்டிருந்த சின்ன குழந்தையைக் காட்டினார்." - சில வீடுகளில் எனக்கு இவ்வாறு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். மூத்த பெண்’ என்றால் கலியாணமாகாத மூத்த பெண் என்பதுதான் என் அகராதியில் பொருள். அந்தச் சொல்லை இவர் இந்தக் குழந்தைக்குப் பயன்படுத்தினார். 'மூத்தது பெண் குழந்தை' என்று திருத்த ஆரம்பித்தேன். "அடுத்தவன் பையன்” அவனும் குழந்தையாகத்தான் இருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/107&oldid=772800" இலிருந்து மீள்விக்கப்பட்டது